Header Ads



சார்ஜாவில் திருட்டில் ஈடுபட்ட இலங்கையர் 4 பேர் கைது

சார்ஜாவில் உள்ள வீடுகளில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களிடமிருந்து 2 லட்சத்து 20 ஆயிரம்  தினார் பெறுமதியான நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், பெறுமதியான பல நகைகளை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சார்ஜா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்தக்குழுவிடம் இருந்து போலியான கடவுச்சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

No comments

Powered by Blogger.