ஓடும் ஆட்டோவிலிருந்து விழுந்து இரண்டரை வயது குழந்தை வபாத்தானது
கிண்ணியாவில் ஆட்டோவின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.
கிண்ணியா மஹ்ரூப் நகரைச் சேர்ந்த சபிக் றிஸ்கான் என்ற இரண்டரை வயது நிரம்பிய குழந்தையே உயிரிழந்துள்ளது.
இக் குழந்தையை ஆட்டோவின் பின் ஆசனத்தில் அமர்த்தி நேற்று முன்தினம் சனிக்கிழமை கொண்டு சென்ற போது குழந்தை தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்து.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று குழந்தை உயிரிழந்தது.
இன்னலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்
ReplyDeleteDaoud Tharik