இனவாதத்தை தோற்றுவிக்க மீண்டும் சதி - எச்சரிக்கிறார் அமைச்சர் றிசாத் பதியுதீன்
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா
அன்றிருந்த தமிழ் தலைவர்கள் சரியான முறையில் மக்களுக்கு வழிகாட்டியிருந்தால் இவ்வளவு அழிவுகளையும் தமிழ் மக்கள் சந்தித்திருக்கமாட்டார்கள் என்று பாரம்பரிய கைத்தொழில்,சிறு தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்திற்கான செழிப்பான இல்லம்-வளமான தாய்நாடு என்னும் வாழ்வு எழுச்சி நிகழ்ச்சி திட்டத்தின ஆரம்ப நிகழ்வு இன்று வவுனியா காமினி மகா வித்தியாலத்தில் இடம் பெற்ற போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பஷில் ராஜபக்ஷவின் 25 இலட்சம் குடிசைக் கைத்தொழில் ஊக்குவிப்பு திட்டத்திற்கமைய வடமாகாணததிற்கான 4வது கண்காட்சி இதுவாகும். இன்று சனிக்கிழமையும்,நாளை ஞாயிற்றுக் கிழமையும் இந்த கண்காட்சி இடம் பெறும். இங்கு மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசுகையில் கூறியதாவது,
இந்த கண்காட்சி மூலம் எமது மக்கள் பெரும் நன்மையடைய முடியும்.தொழிலொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை வவுனியா மாவட்ட மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுல தமிழ் தலைவர்கள்,இன்று மக்களை பிழையாக வழிநடத்த முனைகின்றனர்.இதன் மூலம் அவர்கள் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளவே முனைகின்றனர்.மக்கள் இதற்கு துனை போகக் கூடாது என்றார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசும் போது,
அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசும் போது,
வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் எந்த வித இனபாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை. தமிழ்,சிங்கள,முஸ்லிம்கள் என்ற பிளவுகள் இங்கு இல்லை. ஆனால் சிலர் இங்கு இனவாதத்தை தோற்றுவிக்க முயலுகின்றனர். கடந்த காலத்தில் இவர்கள் தான் இப்பிரதேசத்தில் இந்த மக்களை அழிவுகளுக்கு இட்டுச் சென்றவர்கள். மீண்டும் அவர்கள் அதனை செய்யலாம் என்று நினைக்கின்றனர்.அதற்கு மக்கள் இனியும் இடம் கொடுக்க கூடாது.
ஜனதிபதியின் மஹிந்த சிந்தனை உருவாக்கம் தான் இந்த கண்காட்சியின் நோக்கமாகும். அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று உல்லாசப் பயணத்துறை பிரதானமான தாக விளங்குகின்றது.அந்த சுற்றுலாவுக்காக இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் நுகர்வதற்கு தேவையான பொருட்களை எமது பிரதேசத்தில் உற்பத்தி செய்து குடிசைத் தொழிலை மேபடுத்த நடவடிக்கையெடுக்கலாம்.
இந்த நாட்டில் 30 ஆயிரம் குடிசைக் கைத்தொழிலுக்கான வாய்ப்புக்களை நோக்கி நகர்கின்றது.அந்த பட்டியலில் குறைந்தது வவுனியா மாவட்டத்தில் ஆயிரம் குடும்பங்களாவது இதில் இணைந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாங்கள் அபிவிருத்திகளை செய்கின்ற போது சில சக்திகள் அந்த அபிவிருத்திகளை முடக்குவதற்கு முயற்சிக்கின்றன.கடந்த 30 வருடம் நாம் போராடிய போரட்டத்தின் பிரதி பலன்களை கண்டுள்ளோம். இதன் மூலம் அடைந்தது எதுவுமில்லை. இலந்தவற்றை மீளப் பெறுவது என்பது எவ்வளவு சிரமமானது. இன்று நாடு கெட்டு பேராடிய நாம் இன்று தடுப்பில் இருக்கின்ற தமது பிள்ளைகளை விடுவிக்க கோறி போராட்டங்களை நடத்துகின்றனர். இனைந்திருந்த வடகிழக்கின் அதிகாரமும்,பிரிந்து இன அதிலும் குறைவு காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு யதார்த்த நிலையினை புரிந்து கொண்டு இந்த நாட்டினதும் வடமாகாணத்தினதும் மக்களது விமோசனத்திற்கும் தேவையானதை பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். என்று கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திரி,வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் சாஹிப் மொஹிதீன்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment