நியூயோர்க் பொலிஸாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள முஸ்லிம்கள்
அமெரிக்காவில் மசூதிகள், முஸ்லிம்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதற்கு தடை கோரி நியூயார்க் போலீசுக்கு எதிராக முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த பிரபலமான இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தகர்த்தனர். கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடந்த இந்த பயங்கர தாக்குதலில் 3,000க்கும் அதிகமானோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அந்த தாக்குதலுக்கு பின் அமெரிக்க பாதுகாப்பில் பல கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், நியூயார்க்கில் மசூதிகள், முஸ்லிம்கள் நடத்தும் வர்த்தக நிறுவனங்களை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர்.
அங்கு உளவு பார்க்கும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 பேர் கொண்ட முஸ்லிம் வக்கீல்கள் நியூ ஜெர்சி கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்கள் மத வழிபாடு நடத்தும் மசூதிகள், வர்த்தக நிறுவனங்களை நியூயார்க் போலீசார் பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது. இது மக்களிடம் பிரிவினையை காட்டுவதாகும். எனவே, எதிர்காலத்தில் மசூதிகள், வர்த்தக நிறுவனங்களை நியூயார்க் போலீசார் கண்காணிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
மேலும் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நியூயார்க் போலீசார் சேகரித்து வைத்துள்ள உளவு ஆவணங்களையும் அழிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இதுகுறித்து முஸ்லிம் வக்கீல்கள் குழு இயக்குனர் பர்ஹானா கேரா கூறுகையில், அமெரிக்காவின் வளர்ச்சியில் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. ஆனால், இஸ்லாமிய மதத்தினர் என்ற ஒரே காரணத்துக்காக எங்களை தொடர்ந்து கண்காணிப்பது சட்டவிரோதமானது. நாங்கள் சாதாரண குடிமக்கள். அன்றாட பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இதுகுறித்து முஸ்லிம் வக்கீல்கள் குழு இயக்குனர் பர்ஹானா கேரா கூறுகையில், அமெரிக்காவின் வளர்ச்சியில் இங்குள்ள ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. ஆனால், இஸ்லாமிய மதத்தினர் என்ற ஒரே காரணத்துக்காக எங்களை தொடர்ந்து கண்காணிப்பது சட்டவிரோதமானது. நாங்கள் சாதாரண குடிமக்கள். அன்றாட பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
இதுகுறித்து நியூயார்க் போலீஸ் துணை கமிஷனர் பால் புரோனி கூறுகையில், சட்டப்படிதான் நாங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். தீவிரவாதிகள் மீண்டும் நியூயார்க்கில் நுழைந்து தாக்குதல் நடத்துவதையும், பலர் பலியாவதையும் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

அப்போ அமெரிக்கா மட்டும் தான் உலக நாடுகள் முழுவதும் புகுந்து தாக்குவதற்கு உரிமம் பெற்றவர்களா?பயங்கரவாதத்தை எந்த முஸ்லீமும் ஆதரிக்கவில்லை.அமெரிக்க,ஐரோப்பா பயங்கரவாதத்தை எப்படி தடுப்பது.
ReplyDeleteMeraan