Header Ads



இப்படியும் ஒரு கண்டுபிடிப்பு...! - ஆபத்தும் உள்ளதாம்

வாய்க்குள் பொருந்தும் வகையிலான mp 3 வைப்ரேட்டர் கருவியை அமெரிக்க மாணவி உருவாக்கி இருக்கிறார். சுருட்டு போல இக்கருவியை பல் இடுக்கில் வைத்துக் கொண்டால், எலும்பு வழியாக அதிர்வு கடத்தப்பட்டு மூளைக்குள் நேரடியாக பாட்டு சத்தம் கேட்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது பார்சன்ஸ் டிசைன் பள்ளி. அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வித்தியாசமான கண்டுபிடிப்புகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்து வருகிறது. இங்கு படிக்கும் ஐசன் கரோ சாசின் என்ற மாணவி ‘பிளே எ கிரில்’ என்ற எம்பி3 பிளேயர் கருவியை உருவாக்கியுள்ளார். வாயின் மேல் பக்கத்தில் கன கச்சிதமாக பொருந்தும் வகையிலான எம்பி3 கன்ட்ரோல் சிஸ்டம், அதை ஒட்டி கீழ் பக்கத்தில் சின்னச் சின்னதாக பட்டன்கள் உள்ளன.

பாட்டு மாற்றுவது, சவுண்டு ஏற்றி, இறக்குவது ஆகியவற்றை நாக்கு மூலமாகவே அட்ஜஸ்ட் செய்யலாம். ஸ்பீக்கருக்கு பதிலாக ஒரு வைப்ரேட்டிங் மோட்டார். இது சற்று பெரிய சைஸ் சுருட்டு போல உள்ளது. பாட்டு ஆரம்பித்ததும் ஸ்பீக்கரில் சத்தம் வருவதற்கு பதிலாக, வைப்ரேட்டிங் மோட்டார் இயங்க ஆரம்பிக்கும். அதை கடைவாய் பல்லில் கடித்துக் கொள்ள வேண்டும்.. அவ்வளவுதான். பற்கள், எலும்பு  வழியாக அதிர்வு அலை கடத்தப்பட்டு நேரடியாக மூளைக்குள்ளேயே பாட்டு கேட்கும். அதிர்வு அலை என்பதால் துளிகூட வெளியே சத்தம் கேட்காது.

இதுபற்றி மாணவி ஐசன் கூறியதாவது: பற்களில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் எனாமல் பூசிக்கொள்வது பேஷனாகி வருகிறது. பாப் பாடகர், பாடகிகள் பல்லில் வைர கற்களையும் பொருத்திக் கொள்கின்றனர். பாடிக்கொண்டே இசை கருவியையும் வாசிக்க வசதியாக சில பாடகர்கள் வாயடக்க கருவிகளை பயன்படுத்துகின்றனர். பல்லின் மூலம் அதிர்வை கடத்த செய்து காது கேட்க செய்யும் கருவிகள் 1880-ம் ஆண்டுகளிலேயே புழக்கத்தில் இருந்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ‘பிளே எ கிரில்’ கருவியை தயாரித்தேன். வைப்ரேட்டிங் மோட்டார் மற்றும் எம்பி3 கன்ட்ரோல் பட்டன்கள் வாய்க்குள் அடங்கிவிடும். வயருடன் எம்பி3 பிளேயரை கையில் வைத்திருக்க வேண்டி உள்ளது. ப்ளூடூத்தில் இயங்கும் வகையில் விரைவில் மாற்றம் செய்ய உள்ளேன். இவ்வாறு ஐசன் கூறியுள்ளார்.

இதுபற்றி பல் டாக்டர்கள் கூறுகையில், ‘பிளாட்டினம், வைரக்கல் போன்றவற்றை பல்லில் பொருத்திக் கொள்வது எனாமலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், காது கேளாதவர்களுக்கு பயன்படுத்திய வைப்ரேட்டிங் தொழில்நுட்பத்தை பாட்டு கேட்க பயன்படுத்துவது ஆபத்தானது. தொடர்ச்சியாக இதுபோல எலும்பு வழியான அதிர்வு மூலம் பாட்டு கேட்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்’ என்றனர்.


No comments

Powered by Blogger.