வடக்கில் இந்தியாவின் வீடுகள் - முஸ்லிம்களையும் இணைக்க இந்தியாவிடம் நேரடி மகஜர்
TM
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசியின் நிதியுதவியில் வட மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50,000 வீடுகளில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் இணைக்குமாறு கோரி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மஜரொன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்சட் நிஸாம்தீனால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மாகாண சபை உறுப்பினர் தலைமையிலான குழுவினரால் குறித்த மஜர் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் இந்திய வீட்டு திட்டத்தில் இணைக்குமாறு குறித்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வீட்டு திட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களையும் இணைந்துகொள்ளுமாறு கோரி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவிற்கு அண்மையில் கடிதம் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலே பிளாட்பாரத்தில் மக்கள்!,மல சல வசதியில்லாமல் தெருவோரத்தில் காலை கடன்!.இந்த லட்சணத்தில்
ReplyDeleteஇலங்கை மக்களுக்கு வீடாம்.அதில் முஸ்லீம்களுக்கு பங்கும் வேண்டுமாம்.
இந்தியாவிலிருந்து வரக்கூடிய சினிமா,நாடகங்களை நிறுத்தினாலே மானமுள்ள ஒவ்வொரு தமிழனும்,முஸ்லீமும்
உழைத்து தான் சொந்த செலவில் சகலதையும் செய்து கொள்வான்.
புலிகளால் பதுக்கி வைத்திருக்கும் வெளி நாட்டு சொத்துகளை நெறிப்படுத்தினாலே ஐந்து இலட்சம் வீடுகள் கட்டலாம் .Meraan
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் மீரான்,
ReplyDeleteஇந்தியா தரும் வீட்டில் உங்களுக்கு தேவை இல்லாமல் இருக்கலாம்.
பயங்கரவாதிகளால் துவம்சம் செய்யப்பட்டு, நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் அபலைகளுக்கு தேவையான வீடுகளை இந்தியாவிடம் கோருவதை விடுத்து, இந்தியாவிற்கு எதிரான வசனங்களை அள்ளித் தெறிப்பது நலன் பயக்குமா?