கையடக்க தொலைபேசிகளில் மைய்ட்டா பூச்சி - கவனம் செலுத்த வேண்டுகோள்
கையடக்கத் தொலைபேசிகளில் காணக்கூடிய மைய்ட்டா எனப்படும் மிகச் சிறிய வகையான பூச்சி, தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என வைத்திய ஆய்வு நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என அதன் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் சமரநாயக்க குறிப்பிடுகின்றார்.
கையடக்கத் தொலைபேசியை காதுகளுக்கு அருகில் வைத்து பயன்படுத்துவதனால், இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் வைத்திய ஆய்வு நிறுவனத்தில் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இது தொடர்பிலான முறையான ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், தமக்கு கிடைத்த பல தகவல்களை பட்டியல்படுத்தியுள்ளதாகவும் விசேட வைத்தியர் அனில் சமரநாயக்க கூறினார். இதனால் பாதிப்பு ஏற்படுமா என்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாக வைத்திய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment