பௌத்த பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது கெடுதியானது - பேராசிரியர் சரத் விஜேசூரிய
Gtn
பௌத்த பிக்குகள் நாடாளுமன்றத்திற்கு சென்றதன் காரணமாகவே விடுதலைப்புலிகளுடானான போரில் வெற்றிப்பெற்றதாக கருத்து கட்டியெழுப்பபட்டு வருவதாகவும் எனினும் உண்மைக்கு புறம்பானது மாத்திரமல்ல, அது மிதமிஞ்சிய மதிப்பீடு எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் இந்த நாட்டின் அரசியல் விடயங்களில் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்தனர் என்பது தெளிவான விடயம். எனினும் பிக்குகள் நாடாளுமன்றத்தில் அமர தேர்தலில் போட்டியிட்ட அரசியலுடன் அதனை ஒப்பிடுவது உண்மைக்கு புறம்பானது. பௌத்த பிக்குகள் நாட்டின் கலாசாரம், அரசியல் நடவடிக்கைகளில் பண்டைய காலம் தொட்டே மறைமுகமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
எனினும் தற்போது அவர்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது கெடுதியான செயற்பாடு, நாடாளுமன்றத்தில் பிக்குகளின் உண்மையான நிலைமை, அவர்களுக்குரிய கௌரவம் என்ன என்பது குறித்து பேசக் கூட தயங்குகின்றனர். தர்ம ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்க போவதாக கூறி பிக்குகள் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிப்பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றனர். அவ்வாறு நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர்கள் தர்ம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதக கூறி விடயம் ஒரு புறமிருக்க, அவர்களுக்குள்ளே ஒற்றுமையாக செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.
நாடாளுமன்றத்திற்கு சென்ற பிக்குகளுக்குள் பிளவு ஏற்பட்டது. ஒரு முறை நாடாளுமன்றத்திற்குள் இடம்பெற்ற சம்பவம்; ஒன்றின் போது மக்கள் பிரதிநிதி ஒருவர் பிக்கு ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார். இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படும் பிக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பதிலாக குறைந்து போயுள்ளது. இதனால் பிக்குகளின் நாடாளுமன்ற பயணம் தோல்வி அடைந்து விட்டது எனவும் விஜேசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment