Header Ads



இலங்கை அமெரிக்காவின் வலையில் சிக்கிவிட்டது - கலாநிதி குணதாச அமரசேகர

எனத் தெரிவித்துள்ள தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், அரசின் கொள்கைகள் தடம்புரள்வதானது நாட்டுக்கு பேராபத்தாகும் என்றும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குலகத்தின் சூழ்ச்சிப் படலத்தின் முதல் அங்கமே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் என்று அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமர சேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய ஐ.நா. குழுவொன்று இலங்கை வரவுள்ளது என அறியமுடிகின்றது. அதற்கு அரசும் அனுமதியளிக்கப் போவதாகத் தெரியவருகின்றது. இந்தக் குழுவினர் வந்த பின்னர் ஐ.நா. மனித  உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இங்கு வரவுள்ளார்.

மேற்குலக நாடுகளின் இலங்கைக்கு எதிரான சூழ்ச்சிப் படலத்தின் முதல் அத்தியாயமே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமாகும். ஜெனிவாத் தீர்மா னத்தை அரசு நிராகரித்துள்ளது. அப்படியானால், ஏன் ஐ.நா. குழுவை நாட்டுக்குள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும்? அவ்வாறு செய்வது தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் எனக் கூறுவதற்குச் சமனான செயலாகும்.

அமெரிக்காவின் சூழ்ச்சியால் இலங்கை அரசின் கொள்கைகள் தடம்புரள்கின்றன. அந்நாட்டின் சூழ்ச்சி வலையில் சிக்கும் நிலைப்பாட்டையே அரசு எடுத்துள்ளது. இது நாட்டுக்கு நல்ல தல்ல என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம் என்றார்  

No comments

Powered by Blogger.