Header Ads



கண்டியில் ஜமாத்தே இஸ்லாமியின் இஜ்திமாவை நிறுத்திய குண்டர்கள்

தகவல் உதவி - இனாமுல்லாஹ் மஹ்சுதீன்

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி  நேற்று சனிக்கிழமை காலை 09 /06 /2012 கண்டி மீராம் மக்கம் பள்ளி வாயலில் நடாத்திய ஆண்களுக்கான இஜ்திமா பள்ளிவாயலினுள் புகுந்த குண்டர்களால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது.

இதையடுத்து இன்று பதியுதீன் பாலிகா தேசியப் பாடசாலையில் பெண்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இஜ்திமாவை ஜாமாதே இஸ்லாமி நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளது. இஜ்திம்மாவை நடாத்த வேண்டாம் நடாத்தினால் பிரச்சினைகள் எல்லாம் என காலையில் ஏற்பாட்டாளர்களிடம் கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

இஸ்லாத்தின் பெயரால் காடைத் தனங்களை அரங்கேற்றும் தீய சக்திகளின் நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டும், அதேவேளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இது குறித்த பாரபட்சமற்ற விசாரணையை நடாத்துவதோடு எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெறாதிருப்பதனை உறுதி செய்ய வேண்டும். இன்று முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான நிகழ்வுகள் எமது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன.!

15 comments:

  1. ஏன் இஸ்லாத்துக்குள் இவ்வளவு பிரிவு நல்லதை யார் சொன்னால் என்ன ?கேட்டு நடப்பதுதானே. ஏன் இந்த அடியாட்களும் குண்டர்களும் ? பள்ளிவாயில்கள் மற்றும் முஸ்லீம் சமூகத்துக்கு அநீதி நடக்கும் பொது இந்த குண்டர்கள் எங்கே போயி ஒளிந்து இருந்தார்கள் ???????????? இஸ்லாதுக்குள்ளே இப்படி கருத்தொற்றுமை எட்டாத வரைக்கும் அந்நியர்களுக்கு கொண்டாட்டம் தான் . சும்மா வாயளவில் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான் நாம் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று .........
    இஷாக் ரஹீம்
    டோஹா கட்டார்

    ReplyDelete
  2. Samoohaththilulla Ivvarana Kadayarhalal Samoohaththin Ottumai kku Pagkan Varamal Thadukka Ijthimavai Nadaththamal Viddamikkaha Enathu Parattukkal

    ReplyDelete
  3. I thought, the people who involved in stoping the Ijthima is non muslims. After reading the whole story only found that, it was done by our brotherhood muslims. it is a shame on whoever did it. Allah is the greatest.
    AWMF
    Doha, Qatar

    ReplyDelete
  4. ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். பெயரைப் போட்டு எழுதினால் பிரிசுரிக்க மாட்டார்கள். இவங்களுடைய வீரமெல்லாம் இவ்வளவுதான்இப்படி பிரிந்து நின்று அடிபடுவதனால் தான் எல்லா மதவாதிகளுக்கும் குளிர்விட்டு போய்விட்டது. ஒரு சில உலமாக்கள் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கழுவிய மீனிலும் நழுவிய இருக்கிறார்கள். உண்மையை மக்கள் விளங்கி தங்களை விட்டு பிரிந்து விடுவார்கள் என்ற பயமும் கொஞ்சக் காலமாக அதிகரிப்பது ரவுடித்தனம் செய்வதற்கு ஒரு காரணம். மார்க்கத்தை சொல்ல வேண்டியவர்கள் குரான்,ஹதீஸ் அடிப்படையில் சொல்லுவார்களாக இருந்தால்,இவ்வளவு பிரிவுகள் வந்திருக்காது நபி வாக்கும் மெய்ப்படத்தானே வேண்டும்.மனிதனாகப் பிறந்து கொஞ்சம் ஓதி,படித்து,
    பதவிக்கு வந்து விட்டாலே தனக்குப் பின்னால் ஒளி
    வட்டம் வீசுவதையும்,ஒரு சிறு கூட்டம் பின் தொடர்வதையும் விரும்புவனாகத்தானே இருக்கிறான்.
    Meraan

    ReplyDelete
  5. தீன் தாரிகள் என்று பெருமையாக பேச கூடியவர்கள்தான் இப்படியான குண்டர்களை ஏவி விட்டு வேடிக்கை பாப்பது இவர்களின் வாழை அடி வாழையாக உள்ள பழக்கம்
    கத்தாரில் இருந்து
    அப்துல் ஹகீம்

    ReplyDelete
  6. Neenkal Islathai padippathukku aarwam ullawar .

    ReplyDelete
  7. Assalamu Allaikum

    Rowdy means who are they actually what are they want ,,just look forward and ask them ,,,

    ReplyDelete
  8. وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ
    அல்லாஹுடைய மளிகையில் அவனுடைய பெயர் கூறப்படுவதை
    விட்டும் தடுக்க கூடியவனை விட (இவ்வுலகில் ) அநியாயக்காரன் (வேறு ) யார் இருக்கமுடியும் ? அல்குர்ஆன் சூரா அல் பகரா o115
    மவ்தூதி
    டோஹா கட்டார்

    ReplyDelete
  9. தம்புளு விகாராதிபதி இனாமலுவே சுமங்கல தேரர். vs மாவட்ட ஜம்இயத்துல் உலமா சபை

    ReplyDelete
  10. All Ceylon Jamiyyathul Ulama should take action against to "Raudees gang" and backers who make brain washed and sent these raudees....

    Surathul Baqara : 115

    Mohamed
    Riyadh
    K.S.A.

    ReplyDelete
  11. Allavin markkethai sollum engal paneai kundero&alaviyo thandikkamudiathu ALLAHU AKUBER,al saadi(Ariff Aliyar)

    ReplyDelete
  12. குன்டர்கலை ஏவி விட்டவர்கள் பெரிய பெரிய குண்டாத்தான் இருப்பார்கள் ,உண்மையில் யார் இச்செயலை செய்தார்கலோ அவர்களை
    நடு ரோட்டில் விட்டு ?
    யாழ் குருவி

    ReplyDelete
  13. whoever did this - Really very bad

    ReplyDelete
  14. இதுவொன்றும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமிக்கு புதிய விடயமல்ல. இது போன்ற மட்டரகமான செயற்பாடுகளால் ஜமாஅத் தனது பணிகளை விட்டு ஒதுங்கப் போவதுமில்லை..
    இதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்து இஸ்லாத்தின் தூதை எத்திவைப்பதில் எமக்குத் தடையாக நாமே அமைந்துவிடாமல் இருக்க வலி செய்யவேண்டும். அல்லாஹுத்தஆளா நம் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக ...

    ReplyDelete
  15. அல்லாஹ்வின் தீன் வளர வேண்டும் இந்த மண்ணை ஆள வேண்டும் என்பது படைத்து ஆள்பவனின் விருப்பமாகும்.இந்த விருப்பத்தை அடையவே இஸ்லாமிய இயக்கங்கள் உழைக்கவேண்டும். இதற்கு மாறாக செயற்படுவோர் சைத்தான்களேயாகும்.தமது இயக்கத்தை நூஹ் நபியின் கப்பலாக நினைத்து ஏனைய இயக்கங்களை மட்டம்தட்ட நினைப்பவர்கள் அல்லாஹ்வை பயந்துகொள்ளட்டும்.நம் நாட்டு முஸ்லீங்களின் தலைமைத்துவத்தை பொறுப்பெடுத்துள்ள ஜம் இய்யதுல் உலமா இதுபோன்ற ஈனச்செயல்களை தடுத்து நிறுத்தவும்,ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தவறுமானால் நம் சமூகம் அழிந்துவிடும். அபூ சிஜா.

    ReplyDelete

Powered by Blogger.