17 ஆவது இரத்தின தீபம் விருது விழா (படங்கள்)
பஸால் ஜிப்ரி
மலையக கலை கலாசார சங்கத்தினால் வருடா வருடம் நடைபெறும் 17வது இரத்தின தீபம் விருது விழா இரண்டாவது தடைவையாக கிழக்கில் நேற்று 9ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி கலை மண்டபத்தில் மலையக கலை கலாசார சங்கத்தின் வடக்கு'கிழக்கு மாகாண தலைவரும் கல்முனை பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோவிந்தராஜா கலந்து கொண்டதோடு'கௌரவ அதிதிகளாககல்வியியலாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் சிரேஸ்ட ஊடகவியாலாளர் ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் மகனும் செய்தியாளரும் இளம் ஊடகவியலாளருமான எப்.எம்.பர்ஹான் ஊடகம்'கல்வி'சமூக சேவை போன்ற துறைகளுக்காக இரத்தின தீபம் விருதும்'பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மலையக கலை கலாசார சங்கத்தினால் நடாத்தப்பட்ட 17வது இரத்தின தீபம் விருது பெற்றவர்களில் ஊடகம்'கல்வி'சமூக சேவை போன்ற துறைகளில் தெரிவு செய்யப்பட்ட 15பேர் விபரம்,
திரு.சரத் குமார உலகொட ( சமூக சேவை )'சத்துர ஜக்தீஸ் திலீப சிங்ஹபுரகே ( சமூக சேவை )'கலாபூசன வேலுபிள்ளை சண்முகநாதன் கல்வி சமூக சேவை )'வல்லிபுரம் கந்தசாமி ஜெயபாலன் கல்வி சமூக சேவை )'ராஜகுமாரி கனகசிங்கம் கல்வி சமூக சேவை )' செபஸ்தியன் ஜோசப் கிறேஸ் ( சமூக சேவை )' பாஸூல் பர்ஹான் ஊடகம் கல்வி சமூக சேவை )'சுலைமா லெவ்வை அசீஸ் ஊடகம் கல்வி சமூக சேவை )'சீனிதம்பி ராஜமாணிக்கம் கல்வி சமூக சேவை )'பத்மாதாமோதரம்பிள்ளை (கவிஞர்'எழுத்துத்துறை)'பதியதலாவை பாருக் (கவிஞர்'எழுத்துத்துறை)'கலாபூசனம் மௌலவி பவுஸ் (கவிஞர்'எழுத்துத்துறை)'பிலேந்திரன் (கவிஞர்'எழுத்துத்துறை)'முகம்மது மஹ்றூப் முகம்மது ஸாஜித் கல்வி சமூக சேவை )'சாலிஹ் (சமூக வலுவூட்டல் சமூக சேவை ) ஆகியோர் இரத்தின தீபம் விருதும் 'பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக மலையக கலை கலாசார சங்க ஸ்தாபகர் ரத்தின தீப ராஜா ஜென்கின்ஸ் தெரிவித்தார்.
குறிப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து 'கலாபூசனம் மௌலவி பவுஸ் (கவிஞர்'எழுத்துத்துறை)' பதியதலாவை பாருக் (கவிஞர்'எழுத்துத்துறை)' ' பாஸூல் பர்ஹான் ஊடகம் கல்வி சமூக சேவை ) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
Post a Comment