இலங்கையை அடிமை நாடாக வைத்திருக்க பிரித்தானியா விரும்புகிறது - அமைச்சர் சம்பிக்க
பிரித்தானியா எப்போதுமே தனது ஆதிக்க மேலாண்மையை ஆசிய நாடுகளில் நிலைநாட்ட விரும்புவதாகவும், அந்த வகையில் சிறிலங்காவையும் தனது அடிமைத்தளைக்குள் வைத்திருக்க விரும்புவதாகவும் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பங்களுக்கு பிரித்தானியாவே காரணகர்த்தா எனவும் சம்பிக்க கண்டித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் ரான் கீன், வடக்கிலிருந்து சிறிலங்காப் படையினர் குறைக்கப்பட்டு தெற்குக்கும் பரவலாக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். அவரின் இக்கருத்து சிறிலங்கா அரச தரப்பில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இவ்விடயம் தொடர்பில், ரான்கீனுக்கும் சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
அயினும் கடும்போக்குடைய சில பெரும்பாண்மை அரசியல்வாதிகள், அவ்விடயத்தை வைத்து அரசியல் நடத்திவரும் நிலையில், சம்பிக்க பிரித்தானியா மீது தனது சீற்றத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரித்தானியாவால் சிறிலங்கா உட்பட ஆசிய நாடுகள் 1948ம் ஆண்டு காலப்பகுதி வரையில் அடிமைப்படுத்தப்பட்டே வைக்கப்பட்டிருந்தன. அதன் பின்னரும் தமிழின பிரிவினை வாதத்தை ஊக்குவித்து நாட்டில் மோதல்கள் ஏற்பட பிரதான காரணகர்த்தாவாக பிரித்தானியாவே விளங்கியது.
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரன்கின் நாட்டின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்நாட்டு விடயம் ஒன்றை மையப்படுத்தி கருத்தை வெளியிட்டார். இதனை வன்மையாக ஜாதிக ஹெல உறுமய கண்டிக்கின்றது.
வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட எந்தவொரு நாட்டிற்கும் உரிமை கிடையாது. எமது விவகாரங்களில் எல்லை மீறிச் செயற்படும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கோ பிரித்தானியாவிற்கோ கிடையாது.
லியாம் பொக்ஸ் தலைமையிலான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாகவும் அவர்கள் வடக்கின் இராணுவ முகாம்கள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்கு வரும் நோக்கத்தை லியாம் பொக்ஸ் குழுவினர் மாற்றிக் கொள்ள வேண்டும். வடக்கு இராணுவ முகாம்கள் தொடர்பாகவோ ஏனைய உள்நாட்டு விடயங்கள் தொடர்பாக ஆராய எந்தவொரு அந்நிய நாட்டின் பிரதிநிதிகளும் நாட்டுக்குள் நுழையக் கூடாது. இவ்வாறான விடயம் தொடர்பில் அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும்.
முள்ளிவாய்க்கால் தொடர்பாக போலியான பிரசாரங்களை பிரித்தானியாவே முன்னின்று முன்னெடுத்தது. எனவே பிரித்தானியாவின் நோக்கங்களை உள்நாட்டில் ஈடு செய்து கொள்ள இடமளிக்கப் போவதில்லை.
அதே போன்று நவநீதம்பிள்ளை தனக்குள்ள பொறுப்பையும் வரையறையையும் கணித்துச் செயற்பட வேண்டும். நவநீதம்பிள்ளை தான் ஒரு அதிகாரி என்பதனையும் தனக்குள்ள பொறுப்பையும் மறந்து செயற்படக்கூடாது. இலங்கையில் வீர தீர செயல்களை அரங்கேற்றுவதால் எவ்விதமான பயனும் இல்லை. என்றார்.
அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படுகின்ற எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்யாது சிறிய நாடு என்பதால் இலங்கைக்கு வீண் அழுத்தங்களை கொடுக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்க மாட்டோம். என்றார்

Post a Comment