சரத் பொன்சேக்காவுக்கு அரசாங்கம் அழைப்பு..?
வலம்புரி
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை புறக் கணிக்கும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள் ளிட்ட எதிர்க் கட்சிகளை ஒன்றிணை க்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குதல், போர்க்குற்ற விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை வலியுறுத்தும் ஜெனிவாத் தீர் மானத்தை ஒட்டுமொத்தமாக எதிர் ப்பதற்கும் அமெரிக்கா, இலங்கை அர சுக்குக் கொடுக்கும் அழுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும், ஐ.நா. மனி தவுரிமை ஆணையாளர் நவநீதம்பி ள்ளை தலைமையிலான குழுவினர் இலங்கை வருவதைத் தடுக்கும் நோக்கிலும் பெரும்பான்மை சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம் கொண்ட அமைப்பை உருவாக்க அரசு தயாராகி வருவதாகத் தெரிய வருகின்றது.
இதில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களையும் இணைத்து ஐ. நா.மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை வருவதை அல்லது இலங்கை விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரி ய வருகிறது.
இதுதொடர்பில் சரத் பொன்சேகாவுடன் அரசின் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர்கள் இரகசியப் பேச்சுக் களில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும் புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கி ன்றன

Post a Comment