Header Ads



இந்தியாவில் புலிகளுக்கு மீண்டும் தடை

விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது.  விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்படுவது குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளும், தலைவர்களும்  மீள ஒருங்கிணைய முயற்சிப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ராஜிவ்காந்தி கொலையை அடுத்து 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய்யாவில் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.