மஹிந்த ராஜபக்ஸவின் மனைவியின் சகோதரர் வீட்டில் 8 மில்லியன் கொள்ளை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும் இலங்கையின் முதல் பெண்மணியுமான சிராந்தி ராஜபக்சவின் குடும்ப வீட்டில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள குறித்த வீட்டில் யாரும் இல்லாத வேளையில், வீடு உடைக்கப்பட்ட 8 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.சிராந்தியின் இந்த குடும்ப வீட்டில் அவரது உறவினரும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் தலைவருமான நிசாந்த விக்கிரமசிங்க தங்கியுள்ளார். எனினும் கொள்ளை சம்பவத்தின்போது அவர் வீட்டில் இருக்கவில்லை. ஆரம்ப விசாரணைகளில் இருந்து நகைகள், வெளிநாட்டு நாணயங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
big hora yaal muslim inaiyathalam intha kudumpa arasiyalai aatharikkintrathaa?
ReplyDeleteno
ReplyDelete