தாயிடம் 25 இலட்சம் ரூபா நஷ்டஈடு கோரும் மகன் (குருநாகலையில் நடந்த சோகம்)
வைஸ்
உதவி - நவமணி
கடந்தவாரம் குருநாகலை மாவட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் ஒரு விஷேடமான வழக்கு நடைபெற்றது. விஷேடத்துவம் என்னவென்றால் ஒரு மகன் தனது தாய்க்கு எதிராக தாக்கல் செய்த வழக்காகும்.
தனது தாயும் தனது உடன் பிறந்த சகோதரியும் தன்னை அவமதித்ததாகக் கூறி அதற்காக நஷ்டஈடு கோரியே அந்த வழக்கை மகன் தாக்கல் செய்திருந்தார். அதாவது தாய் தன்னை அவமானப்படுத்தியாகக் கூறி தாயிடம் இருந்து 25 லட்சம் ரூபா நஷ்டஈடு பெற்று தரும்படி அந்த மகன் தாய்க்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏன் எங்களுக்கு முக்கியமானது அந்த மகனும் தாயும் முஸ்லிம்கள் என்பதனாலாகும். தாயின் பெற்றோரின் முக்கியத்துவத்தையும் அவர்கள் மீதுள்ள பிள்ளைகளின் கடமை பற்றியும் இஸ்லாம் தெளிவாகக் கூறும்போது அதை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அர்த்தம் பார்த்து உலமாக்களிடம் கேட்டு இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்ளும் முஸ்லிம் மகன் தன்னை பெற்றெடுத்த, பாலூட்டி வளர்த்த தாய்க்கு எதிராக வழக்கு அதுவும் தாய் தனக்கு மானபங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
வழமையாக நீதிபதிகள் அதிகம் பேசுவதில்லை. ஆனால் இந்த வழக்கிலே நீதிபதி அந்த மகனுக்கு நீண்ட நேரம் தெளிவுபடுத்தினார்.
இது உம்மைப் பெற்றெடுத்த தாய். உம்மை பாலூட்டி சீராட்டி வளர்த்த தாய். அவள் உனக்குத் தந்த பாலின் சக்தியால்தான் இந்தளவு பேசும் வல்லமையை பெற்றாய் என்பதை நீர் உணரவில்லையா. உன்னை வளர்க்க எவ்வளவு இந்தத் தாய் கஷ்டப்பட்டிருப்பாள். இரத்தத்தை பாலாக்கித் தந்த தாயல்லவா அவரிடமா நீர் நஷ்டஈடு கேட்கிறீர் ஆனால் முறைப்படி நீரே தாய்க்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும். உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்ததற்கு நீரே கொடுக்க வேண்டும் என சிந்தித்துப் பாரும். இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வது பற்றி அல்லது சமாதானம் செய்து கொள்வது பற்றி சிந்தியும் எனக் கூறிபல வசனங்கள் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.
இவை அனைத்தும் நீதிபதியின் உள்மனதின் வேதனை வெளிப்பாடு என்பது அவரது முகப் பாவனையில் நன்கு தெரிந்தது.
ஆனால் மகனோ, விட்டபாடில்லை 25 லட்சம் நஷ்டஈடு வேண்டும் என்று கண்டிப்பாக நின்று விட்டார்.
இந்த மகன் தான் ஒரு அகில இலங்கை சமாதான நீதவான் என்பதை பலமுறை திருப்பித் திருப்பி நீதிமன்றத்தில் கூறியதை கேட்கக் கூடியதாக இருந்தது. அது மட்டுமல்ல ஒரு பிரபல அரச நிறுவனத்தின் தொழிலாளி. தாய் இவருக்கு எதிராக அதாவது இந்த மகன் தன்னை தாக்க வந்ததாக தாய் செய்த முறைப்பாடு மூலமே சமாதான நீதவானான தன்னை தாய் அவமதித்து விட்டார் என்பதே வழக்கின் மூலமாகும். இவ்வாறு தாயின் முறைப்பாடு மூலம் ஊரில் ஏற்பட்ட அவமானத்திற்கே 25 லட்சம் ரூபா நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.
தாயோ கிராமத்து சராசரிப் பெண். அவரது உடை மூலம் வசதி படைத்தவர்கள் அல்ல என்பது விளங்கியது. சமாதானப்படுத்தி வழக்கை முடிக்க எவ்வளவோ நீதிபதி முயன்றும் சரிவரவில்லை. வழக்கு விசாரணைக்காக பின்போடப்பட்டுள்ளது.
எமது சமூகம் எங்கே போகிறது. குடும்பத் தொடர்புகள் குடும்பக் கடமைகள் கட்டுப்பாடுகள் என்பன எங்கே? சமூகத்தின் கௌரவ பதவி வகிப்பவர்கள் சமாதானத்திற்கே நியமிக்கப்பட்டவர்கள் இவ்வாறு நடந்தால் என்னாவது? இவர்கள் போன்றவர்களுக்கு சமாதான நீதவான் பதவியை வழங்கியவர்களை என்னவென்பது? அவர்களும் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் சமாதான நீதவானாகிய தன்னை தனது தாய் அவமதித்ததற்காக வழக்குத் தாக்கல் செய்பவர்கள் சமாதான நீதவானின் கடமையை சரியாகச் செய்வாரா?
இது தொடர்பான வாசகர் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. மிக இரத்தினச் சுருக்கமாக எழுதியனுப்பப்படும் பொறுத்தமெனக் கருதப்படும் கருத்துக்கள் பிரசுரிக்கப்படும்.

I don't comment on any other issue, but this incident trigger me to say comment on this, as per my opinion whatever the situation we have to learn respect our parents, so, my opinion this son is useless, shameless, pointless, mindless, cunning human, this kind of fellow should be punish
ReplyDeleteavan porakka modhave irandhu iruka vendum
ReplyDeleteஇலங்கை முஸ்லீம்களே !அவனின் மானத்தின் விலை வெறும் 25 லட்சம்.எல்லோருமாக சேர்ந்து அந்த தொகையை சேர்த்து பிச்சைக்கார நாயின் முகத்தில் துக்கி வீசுவோம் வாருங்கள்.தாயின் அருமை தெரியாத நாயொன்று குறைக்கிறது .
ReplyDeleteMeraan
அந்த புண்ணியவானின் பொன் முகத்தை தரிசிக்க மிக மிக ஆவலாக இருக்கிறோம் .போட்டோ போடவும்.
ReplyDeleteTharik
Munas
ReplyDeleteஇவனின் சமாதான நீதவான் பதிவு இலக்கத்தை கொடுங்கள் அது இருப்பதால்தான் அவனது தாய்க்கு வழக்கு போட்டுள்ளான் அதனையே நாம் பறித்து விடுவோம் இவனெல்லாம் ஒரு மனிதனா?
Ivanudaiya address engalukku venum. Ivan thandikkappada vendiyaven.
ReplyDeleteAvanudaiya samathana nithavan pathavi parikkappaduvathudan avanum thandikka pada vendum. ithana antha oor ilangergal seivargal enru ennukirom.
i can not say any thing about this person because he is not proper man
ReplyDeleteuseless and worthless ideots always takes away the name of Islam. what islam does for this kind of people...excuse. the best way to deal is that, take away his justice of peace membership, and beat him up in the town....
ReplyDeleteHe should pay to his mother for her delivery pain........
ReplyDeleteUseless,Hopeless,Lowlife Beast.Nothing much to say.
ReplyDeleteHe is worse than a qaafir he is a ponnayan listening to prostitute commanding order. doesn't he know Al jennah thahthal aqdhaam mul ummuhaath. I GUESS THIS ALL QAAFIR IS A MENTAL ILL AFFECTED INDIVIDUAL HE MUST SOON SUFFER UNTREATEBL DECEASE THEN HE MUST BEG HIS MUM TO FORGIVE THIS IS A ISHAARAT AKIRUS ZAMAN AL DUNIYA WE WANT HIM TO LOSE HIS JOB STATUS AND MUST SUFFER AS MARKET DOG
ReplyDeleteஅம்மா உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.நீங்கள் அவனுக்கு பாலூட்டியதட்கு,ஆடை வாங்கிக்கொடுத்தது,கல்விக்கான சிலவு,அவனின் மருத்துவ சிலவு,அவனுடைய அழுக்குத்துணி கலுவிக்கொடுத்த கூலி,மொத்தக்கனக்கு ஐந்து கோடி என்று கேட்டு வழக்குத்தாக்கல் செய்யுங்கள்.ஓங்க காலில் விழுந்து கதறுவான்.
ReplyDeleteI wanted to give him dead Punished unless he repeat the Hashadu kalima
ReplyDeletekurunegalayil ulla youth ku solli anda samaadana needawana maratthula katta sollunga.
ReplyDeleteiwanukku tanni sottalum kudukkama maratthula katti adika sollanum.kurunegalayila youth illaya?
ReplyDeleteஇவன நாய் சுடுற மாதிரி ரோட் ல சுடனும் - kurunagale இளைஞ்சர்களே வாலிபர்களே nal ullam kondawarkale இவனுக்கி மரண தண்டனை கொடுத்தால் கூட thaankadhu , ivanukkellam innum தண்டனை கண்டு பிடிக்கப்பட வில்லை?
ReplyDeleteactually this incidence we can knowing he loose the hard he is a not a men i said one solution if you like we can purplish all of medias and for must provide the punish him and must through from this country must take nationality of sri lankan we are respected motherland and all off mother in the earth
ReplyDeleteபத்து மாதம் சுமந்து
ReplyDeleteபாலகனாய் ஈன்றெடுத்து
பாலூட்டி சீராட்டி
பக்குவமாய்
வளர்த்தெடுத்து
உதிரத்தைப் பாலாக
ஊட்டியதை மறந்தாயே!!!
நீ வயிராற
அவள் வயிர் இழந்து
நீ கண் உறங்க
அவள் கண் விழித்து
நீ கதறி அழும் போது
அவள் பதறி அழுதாளே!!!
உன் உருவில்
உலகையே பெற்றதாய்
ஓர் உணர்வு
அவள் உள்ளமதில் உண்டு
என்பதை நீ அறியாயோ!!!
பாடசாலை அணுப்பி உன்னை
படிக்க வைத்து
ஆளாக்கி வளர்த்தெடுத்து
அன்பு காட்டி
அரவணைத்தாளே!!!
இறைவன் தர்பாரில்
அவளுக்கு
ஈடேற்றம் வேண்டும் என்று
இறைஞ்ச வேண்டிய நீ
இருபத்தைந்து இலட்சம் கேட்டு
இடுவாம்பு புரியாதே!!!
இஸ்லாம் கூறும்
ஈன்றோர் கடமைகளை
இயன்றளவு கற்றுக் கொள் ..
இதயத்திலும் பதித்துக்கொள் ..
இல்லையெனில் .....
உனக்கெதிராய்
உன் பிள்ளைகளும்
குற்றவாளிக் கூண்டிற்கு - உன்னை
கூவி அழைப்பார்கள் ................
Suitable and very accurate message in poem thanks for the poet
ReplyDeletewho gave him j.p.post and why?it should be revoked immediately.
ReplyDeleteதாயின் துடிப்பு
ReplyDeleteஉனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது
என் மகன் எப்படி ..மீண்டும்
ஒரு ஜென்மம் எடுப்பேன்
அதிலும் உன் மடி தேடியே
வந்து ஒய்வு எடுப்பேன்
அம்மா!!!.....அன்னை தந்த உயிர் அன்னையின் மடியிலே பிரியட்டும்.from:AHAMED ZAKARIYA
MAWANELL...EMAIL:asmzakariya10@yahoo.com
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்” என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை” என்றார்கள்.
ReplyDeleteபுஹாரி : 5971 அபூஹூரைரா (ரலி).ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாயும் தந்தையும் உயிருடனிருக்கிறார்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம் (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)” என்று கூறினார்கள்.
புஹாரி :3004 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).1654. மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) ‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!” என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு ‘இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ‘குழந்தையே! உன் தந்தை யார்?’ என்று கேட்டார். அக்குழந்தை, ‘(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், ‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், ‘இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு” என் மகனை இவனைப் போல் ஆக்கு” என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, ‘இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே” என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது – பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே” என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, ‘இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு” என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), ‘ஏன் இப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டதற்கு அக்குழந்தை, ‘வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) ‘நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்’ என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை” என்று பதிலளித்தது.AHAMED ZAKARIYA,MAWANELLA,email:asmzakariy10@yahoo.com
In my point of view,he is just a Justice of Peace(Island). but, who knows whether he is aware of Islam? anyhow he had to treat his mother with respect....the main reason behind this case seems his position as a Justice of Peace(Island). but,I think that it could be taken back according to the present law on 'Respecting Parents' in Srilanka. meanwhile he should be given a counselling and the religious knowledge on caring parents without letting him just go on his way....
ReplyDelete