Header Ads



இலங்கை விசாலமடையுமா..? காத்திருக்க வேண்டும் 16 வருடங்கள்


TL

இலங்கையின் கடல் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான வழிமுறையை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய ஐ.நா. தலைமையிலான நடவடிக்கைகள் குறித்து துரிதமான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

2009 மே 8 இல் தற்போதுள்ள 200 கடல் மைல் தூரத்தைக்கொண்ட பிரத்தியேகமான பொருளாதார வலயத்தை 800 கடல் மைல் தூரத்திற்கு விரிவுபடுத்துவதற்கான கோரிக்கையை இலங்கை விடுத்திருந்தது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு 12 தினங்களுக்கு முன்பாக இந்த முயற்சியை இலங்கை நாடியிருந்தது.

400 பக்க ஆவணத்தைக் கொண்ட இலங்கையின் பிரேரணையானது  நாடு உரிமை கோருவதற்கான அடிப்படை ஆவணமாக அமையுமென்று இலங்கையின் தேசிய சமுத்திர விவகார குழுவின் தலைவர் கிறிஸ் தர்ம கீர்த்தி கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விபரித்திருந்தார்.

ஆனால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள 16 வருடங்கள் செல்லுமெனக் கூறப்படுகிறது. ஐ.நா.வினால் வருடாந்தம் 3 நாடுகளின் விண்ணப்பங்களே பரிசீலிக்கப்பட்டுவரும் நிலையில் இலங்கையின் விண்ணப்பத்தை பரிசீலிக்க 16 வருடங்கள் செல்லுமே அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த விண்ணப்பத்தை அனுப்பியுள்ளோர் வரிசையில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கையின் யோசனையைச் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும் அனுபவத்தையும் தர்மகீர்த்தி விபரித்திருக்கிறார். ஐ.நா.வின் நடவடிக்கைகள் இந்த விடயத்தில் தாமதமாவதற்கு பிரதான காரணமாக இருப்பது இந்த விடயத்தை ஆராயும் குழுக்களுக்கு வருடாந்தம் ஆறு கிழமைகள் மட்டுமே ஒதுக்கப்படுவது காணப்படுகிறது.

இதேவேளை, அமர்வுகளை நீடிப்பதற்கான தீர்மானத்தை இலங்கை 120 நாடுகளின் ஆதரவுடன் முன்னகர்த்தி இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். வருடம் முழுவதும் இது தொடர்பான அமர்வுகள் இடம்பெறவேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆறு வாரங்களிலிருந்து 26 வாரங்களாக நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். அமர்வுகளை நீடிப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்படுமானால் இலங்கையின் யோசனை 2018 இல் எடுத்துக்கொள்ளப்படும் சாத்தியமிருப்பதாக தர்மகீர்த்தி கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தூதுக்குழுவொன்று நியூயோர்க்கிற்கு பயணம் மேற்கொள்ளது. சமுத்திர வளங்கள் தொடர்பான வருடாந்த மாநாட்டில் தனது பிரசாரத்தை முன்னெடுப்பதற்காக இந்தக் குழு அங்கு செல்லவிருந்தது. இந்த நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதத்தால் பாதிப்படையும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று தர்மகீர்த்தி கூறியுள்ளார். தர்மகீர்த்தியும் புவியியல் அளவீட்டு கனிம பிரிவின் தலைவருமான கலாநிதி என்.டி.விஜயானந்தவும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.