Header Ads



யாழ்ப்பாணத்தில் 4 மணித்தியாலத்துக்குள் கூரியர் தபால்கள் கையில் கிடைக்கும்..!

யாழ்.பிராந்திய தபாலகத்தில் 4 மணித்தியாலத்துக்குள் தபால்களை ஒப்படைக்கும் கூரியர் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ளூர் தபாலகங்களில் கையளிக்கப்படும் கடிதங்கள், ஆவணங்கள், பொதிகளை 4 மணித்தியாலயத்திற்குள் ஒப்படைக்கும் விசேட கூரியர் சேவையினை வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் என். இரத்தினசிங்கம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

துவிச்சக்கர வண்டியிலும் மோட்டார் சைக்கிளிலும் மற்றும் வாகனங்களிலும் தபால்களை ஒப்படைக்கும் இந்த விசேட சேவை யாழ்ப்பாண தபாலக வரலாற்றில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

1 comment:

Powered by Blogger.