Header Ads



சவூதி அரேபியா ரியாத்தில் 11 இலங்கை பெண்கள் வீடொன்றில் அடைத்துவைப்பு

gtn

இலங்கை பணிப்பெண்கள் சிலர் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவற்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சவூதி காவற்துறையினர் அங்குள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

ரியாத்தில் உள்ள 5 மாடி கட்டடம் ஒன்றில் 11 இலங்கை பணிப்பெண்கள் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ரியாத் காவற்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பெண்கள் பற்றி விசாரணைகளை நடத்தி அவர்களை கண்டறிவது தொடர்பில், இலங்கை தூதரகமும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.