இறைவன் மீது பயபக்தி உடையவர்களுக்கே இறைவன் நல்வழிகாட்டுவான் - மௌலவி புர்ஹான்
மொஹமட் ஹபீஸ்
இறைவன் மீது பயபக்தி உடையவர்களுக்கே இறைவன் நல்வழிகாட்டுவான். இறைவன் மீது பயபக்தி என்பது மறைவான விடயங்கள் தொடர்பாக நம்பிக்கை வைப்பதாகும் என்று அகில இலங்கை 'ஜம்மியத்துல் உலமா' உபதலைவரும் கண்டி மாவட்ட உலமா சபைத்தலைவருமான மௌவி எம்.எச்.எம். புர்ஹான் (பஹ்ஜி) தெரிவித்தார்.
மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ இயக்கம் நடத்தும் 'தாருல் குர்ஆன்' பாலர் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்தில் விஷேட சொற்பொழிவாளராகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மறைவான விடயம் என்பது உலக அடிப்படையில் உன்மை போல் தெரியாதது. ஆனால் நித்திய வாழ்வில் அது உண்மையானதாகும். உதாரணமாக இறைவனை ஒரு பௌதீகப் பொருளாக நம் காண்பதில்லை. அதே நேரம் சகத்தி வடிவிலும் எம்மால் காணமுடியாது. சடப் பொருளாயின் அது திண்மம் திரவம் வாயு போன்ற ஏதாவது ஒரு நிலையில் இருக்கவேண்டும்.
என்றாலும் கண்ணால் காணாது, காதால் கேட்காது ஞானத்தின் மூலம் இறைவன் இருக்கிறான் என்பதை நம்புகிறோம். இதனை விட இறைவனின் ஏனைய பன்புகளான பலவிடயங்களையும் நம்பு கின்றோம். அவனுக்கு இணை துணை இல்லை. ஆதி இல்லை அந்தமில்லை என்றெல்லாம் நம்புகின்றோம்.
இதேபோல் நாம் பார்க்காத போதும் இறைவன் எம்மைப் பார்க்கிறான் என்று நம்பு கின்றோம். மரணத்தின் பின் ஒரு வாழ்க்கை உண்டு என நம்புகிறோம். நன்மை செய்தால் இறையன்பு மூலம் சுவர்க்கத்தையும் அடையாலாம் என நம்புகிறோம். தீமை செய்தால் இறை தண்டனைக்கு உற்படுவோம் எனப் பயப் படுகின்றோம். இவ்வாறு நான் கண்ணால் காணத அல்லது தொட்டு உணர முடியாதவற்றையும் இறை கட்டளைப்படி இருப்பதாக நம்புகிறோம். ஏச்சரிக்கைகளுக்குப் பயந்து நாம் இறைகட்டளைப் படி நடக்கின்றோம் என்றால் அதுதான் பயபக்தி (தக்வா) எனப் படும்.
எனவே தக்வா, பயபக்தி அல்லது இறை நம்பிக்கை உடையவர்கள் மறு உலகிலே உண்மையான வெற்றியை அடைவார்கள். அது முடிவில்லாத வெற்றியாகும்.
அவ்வாறான இறையச்சம் இல்லாதவர்கள் இவ் உலகில் உயர் நிலையில் வாழ்வது போல் தொன்றினாலும் அவர்கள் வாழ்வு கவலையும் மனச்சஞ்சலமும் கொண்டதாகவே இருக்கும்.
எனவே உலகில் நல்லதும் உண்டு. தீயதும்உண்டு. அதேபோல் உலகில் சுத்தமும் உண்டு. அசுத்தமும் உண்டு. மறுமைவாழ்வு அவ்வாறானதல்ல.
இதனால் உலகில் ஒருவர் சேவை செய்தாலும் அவர் மதிக்கப்படாத நிலை தோன்றலாம். அவரது சேவைகள் பற்றி யாரும் கவனத்தில் கொள்ளாதவறாக இருக்கலாம். அதற்கான மகத்தான கூலி மறுமை வாழிவிலே கண்டு கொள்ளமுடியும்.
குறிப்பிட்ட ஒரு வயதின் பின் எமது தாய் தந்தையர் எம்மை மதிக்காதவர்களாக இருப்பர். நாம் எவ்வளவு உதவி அல்லது நன்றிக் கடன் செய்தாலும் அதனைக் கொண்டு திருப்தி அடையாதவர்களாக இருப்பதாக திருக்குர்ஆன் விஷேடமாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாது நாம் எமது தாய் தந்தையருக்கு தேவையான பணிவிடைகளைச் செய்து வரும் போது அதற்கான கூலியை இறைவன் மறு உலகில் வைத்துள்ளான். இது போன்றவைகளே பயபக்தியுள்ளவர்களது பணியாக இருக்கும்.
இவ்உலகில் மனிதர்களிடமிருந்து கூலியை அல்லது புகழ்ச்சியை எதிர்பார்த்து நாம் பொதுச் சேவையில் ஈடுபட்டால் மனக்கவலைதான் கூலியாகக் கிடைக்கும். இதை நாம் அடிக்கடி காண்கிறோம். சிலர் புலம்புவதைக் கேட்கின்றோம். நாம் எவ்வளவு சேவை செய்தாலும் எம்மை மற்றவர் மதிப்பதில்லையே என்று கூறுகின்றனர். இப்படி உலகில் ஏதும் பலாபலன் கிடைக்குமென எதிர் பார்த்தால் மனக் கவலைதான் கிடைக்கும்.
இறை தூதர்கள், இறைநேசர்கள் தாம் செய்த சேவைக்கு இறைவனிடத்தில்தான் கூலி உண்டு எனக் கூறி அவர்கள் உலகில் எத்தகைய கூலியையும் எதிர் பார்க்காது இறையன்பைப் பெற்று அவர்கள் வெற்றி பெற்றார்கள்.
நாம் ஒரு அரச பணியைச் செய்யலாம். அல்லது பொது சேவையைச் செய்யலாம். அல்லது பாராளுமன்றத்திலோ அல்லது உள்ளுராட்சி அமைப்புக்களிலோ போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கலாம். அதன் காரணமாக நாம் செய்யும் சேவைக்கு பிரதி உபகாரம் உலகிலே எதிர்பார்த்தால் அதிலும் இறை திருப்பதியைப பெறமுடியாது. நாம் எதைச் செய்தாலும் இறைவனின் திருப்தியை மையமாகக் கொண்டு செய்யவேண்டும்.
ஒரு சில பொதுச் சேவையாளர்களைப் புகழ்வார்கள். ஒருவர் செய்த சேவையைப் புகழவேண்டுமா? என்பது ஒரு நீண்ட தலைப்பில் பேச வேண்டிய ஒன்று. இருப்பினும் புகழ்ச்சி என்ற அடிப்படையில் அதை மனித மனம் விரும்புகிறது. இது பற்றி முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
புகழ்ச்சிக்காக நாம் ஒரு பணியைச் செவய்யக் கூடாது. ஆனால் பிறர் பாராட்டத் தகுதியுள்ள நல்ல விடயங்களை நாம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அதாவது ஒரு பாதையை அமைத்தால் அதில் பயனம் செய்வோர் சிலவேளை புகழலாம். அந்தப் புகழ்ச்சியை நாம் அவர்களிமிருந்து எதிர் பார்த்தால் மனக் கவலைதான் ஏற்படும். ஆனால் பாதை அமைத்தல் புகழக் கூடீய ஒரு விடயம். எனவே புகழ்சிசயை எதிர்பார்க்காது அதனை மேற் கொள்வதில் தவறு இல்லை என்றார்.
புகழ் அனைத்தும் இறைவனுக்குறியது என்ற நம்பிக்கை உறுதியாக எம்மில் இருக்க வேண்டும். இதற்காக நாம் இறைவனை சதா புகழ வேண்டும். இறைவனைப் புகழ்வதற்கு நாம் மிகப் பெரிய கருமங்களில் ஈடுபடத் தேவையில்லை. இஸ்லாமிய அடிப்படையில் இது மிக இலகுவான காரியமாகும். ஒரு மிகச் சிறிய வசனத்தின் மூலம் அதனை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் அது இறைவனிடத்தில் மிகப் பாரமான வசனம் ஒன்றாக உள்ளது. அதுதான் 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' (உலகைப் படைத்த இறைவனுக்கே அனைத்துப் புகழ்ச்சியும்) என்பதாகும்.
எனவே'அல்ஹம்து லில்லாஹ்' அல்லது 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதை நாம் அடிக்கடி ஓதிக் கொள்ள வேண்டும் என்றார். இவ்வைபவத்தில் மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான, எம்.எஸ்.எம்.சாபி, எம்.ஆர்.அம்ஜத், எஸ்.எம்.எம். மர்ஜான், லாபிர் செய்னுல் ஆப்தீன் உற்படப் பலர் கலந்து கொண்டனர்.





Post a Comment