Header Ads



தம்புள்ள பள்ளி விடயத்தில் ஹிஸ்புல்லா என்ன பாத்திரம் வகிக்கிறார் - ஹக்கீமுக்கு சந்தேகம்


தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளேன். அங்கு வழமை போன்று தொழுகை நடக்கிறது. சமரசம் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என நம்புவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் ஆவேசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. ஆசேமான செயற்படுகள் மேற்கொள்ளப்பட்டன. எமதுபக்க நியாயங்களை உள்ளுரிலும், வெளியூரிலும் முன்வைத்துள்ளோம். தற்போதைய நிலைமையை மேலும் மேலும் பேசி சிக்கல்படுத்தும் நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது.

பௌத்த, சிங்கள தீவிரவாதிகள் அரசாங்கத்தை பணயக் கைதியாக வைத்துக்கொண்டு இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கின்ற நிலைமை இருந்து வருகிறது.

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் எம்மில் சிலர் நல்லபிள்ளை பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூட்டுப் பொறுப்பிலிருந்து மாறி கபடத்தனமாக செயற்பட்டது மிக்க விசனத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது. என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்பும் இவ்வாறான சம்பவங்களில் அரசியல் பதவிகளுக்கு ஆபத்து வரும் என்பதை துச்சமாக மதித்து நான் செயற்பட்டு வந்திருக்கிறேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் அமைச்சர் டளஸ் அழகப்பெரும என்னை பேசமாறு அதற்கு முன்தினம் கேட்டிருந்தார். தம்புள்ள விவகார சூழ்நிலையில் எனது பேச்சு தப்பபிப்பிராயங்களை களைவதற்கு உதவும் என்பதாலேயே நான் அக்ககூட்டத்தில் பேசினேன். நான் எனது மனச்சாட்சிக்கு அமைய மிக ஆவேசமாக பேசினேன்.

நாங்கள் அரசிற்குள் இருந்துகோண்டு நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கு முனைப்புடன் செயற்படுவதற்கு உறுதி பூண்டுள்ளோம்.

மாத்தளை மேயரும், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் தம்புள்ள விவகாரத்தில் என்ன பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமரசத் தீர்வு என்ற போர்வையில் அநியாயமான தீர்வினைப் பெறுவதற்கு அவர்கள் முயற்சிக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தடியெடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் போல மக்கள் ஆணை அறவே இல்லாத ஏட்டுச்சுரைக்காய் அரசில் கட்சித் தலைவர்கள் சிலர் அறிக்கை விடுத்து தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் எப்படி முடிந்துவிட்டது என கேள்வி எழுப்புகிறார்கள். இவ்விவகாரத்தில் என்னை சம்பந்தப்படுத்தி என்னை விகாரமாக எடுத்துச்சொல்ல விரும்பும் சக்திகளிடம் நான் சாணாக்கியமாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்  காங்கிரஸ் தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து இருக்கிறது எனவும் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. தடி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைகரர்கள் இல்லைதான் அப்போ நீங்கள் தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு
    என்று வந்துவிட்டது சொன்னது இதுதான் அரசியலோ

    ReplyDelete
  2. சமுக நலன்களுக்கு அப்பால் எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் இலாபம் அடைவத்க்காக தம்புள்ள விவகாரம் கையாளப்படும் என்பது உறுதி. அதுவரை இது....

    ReplyDelete
  3. அரசியல்வாதி எப்போதும் அரசியல்வாதிதான் .பதவி என்பது போதை போன்றது .ஒரு முறை ஏற்றி விட்டால் விட்டதுதான் .உயிர் போவதாக இருந்தாலும் பதவியை விட்டு இறங்க மனம் வரவே வராது .பதவியில் இருக்கும் போது
    இறந்தால் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியல் தொழிலுக்கு வரலாமல்லவா ?அரசியலும் பரம்பரைத் தொழிலாக
    மாறி பல காலமாகிவிட்டது .
    Meeraan

    ReplyDelete
  4. அக்ஷய பாத்திரமோ..? INAMULLAH

    ReplyDelete

Powered by Blogger.