Header Ads



சரத் பொன்சேக்காவின் மனைவியை சந்தித்தார் மஹிந்த ராஜபக்ஸ



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

நேற்று புதன்கிழமை மாலை இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலசின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, அவசரமாக லண்டனில் இருந்து திரும்பிய ரிரான் அலஸ் நேற்றுக்காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து, சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பாகப் பேசியிருந்தார்.

இதையடுத்தே ரிரான் அலசின் வீடு தேடிச் சென்று அனோமா பொன்சேகாவிடம் மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றுக்காலை பேச்சு நடத்திய பின்னர் ரிரான் அலஸ், நவலோகா மருத்துவமனைக்குச் சென்று சரத் பொன்சேகாவை சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சில விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் பொன்சேகா விரைவில் விடுவிக்கப்படுவார்“ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே மகிந்த ராஜபக்ச, ரிரான் அலசின் வீடு தேடிச்சென்று அனோமா பொன்சேகாவைச் சந்தித்திருப்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது விடுதலை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் தானோ தனது குடும்பத்தினரோ மண்டியிடப் போவதில்லை என்று சரத் பொன்சேகா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.