முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி..? தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு..! தமிழ் ஊடகம் தகவல்
TR
யார் அதிக ஆசனங்களை பெறுகிறார்களோ அக்கட்சிக்கு முதலமைச்சர் பதவியும் மற்ற கட்சிக்கு அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவியும் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்படலாம் என தெரியவருகிறது.
கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக அம்மாகாணத்தில் பலம் பொருந்திய இரு கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தற்போது அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கின்ற போதிலும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனியாகவே போட்டியிட உள்ளது. தனது கட்சிக்கு முதலமைச்சர் பதவியை தரவில்லை என்றால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முடியாது என கூறியுள்ளது.
இந்நிலையில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றபின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைக்கலாம் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் திட்டங்களை வகுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் இணக்கப்பாட்டிற்கு வருவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை ஆயினும் தேர்தல் குறித்து எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தனது சின்னத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சின்னத்திலும் போட்டியிட்ட பின் ஆட்சியை அமைப்பதற்கான இணக்கப்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தற்போது அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக இருக்கின்ற போதிலும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் தனியாகவே போட்டியிட உள்ளது. தனது கட்சிக்கு முதலமைச்சர் பதவியை தரவில்லை என்றால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முடியாது என கூறியுள்ளது.
இந்நிலையில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றபின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை அமைக்கலாம் என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் திட்டங்களை வகுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் மாகாணசபைத் தேர்தலில் இணக்கப்பாட்டிற்கு வருவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை ஆயினும் தேர்தல் குறித்து எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தனது சின்னத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சின்னத்திலும் போட்டியிட்ட பின் ஆட்சியை அமைப்பதற்கான இணக்கப்பாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் அதிக ஆசனங்களை பெறுகிறார்களோ அக்கட்சிக்கு முதலமைச்சர் பதவியும் மற்ற கட்சிக்கு அமைச்சரவையில் முக்கிய அமைச்சு பதவியும் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்படலாம் என தெரியவருகிறது.

சகோதரர் ரவூப் ரகீமிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உள்ள ஒருவர் முதலமைச்சராவது பிடிக்கவில்லை போலத் தெரிகிறது.
ReplyDeleteரவூப் ரகீம் அவர்கள் நினைப்பதுபோல, முஸ்லிம் காங்கிரசிலிருந்து ஒருவர் முதலமைச்சர் ஆனாலும், அந்த முதலமைச்சர் ஜனாதிபதி ஆட்டுவிக்கும் பம்பரமாகத்தான் இருப்பார்.
ஜனாதிபதிக்கு வேண்டும், எப்படியாவது தமிழ், முஸ்லிம் உறவுகளை சீண்டிவிட்டு, தமிழ் பேசும் தாயகங்களை இல்லாமலாக்குவது.
கூத்தமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்தால், அரசிற்கு சங்கடம்தான்.
ஒற்றுமை, சகோதரத்துவம் பேசும், நமது நீதி அமைச்சருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணியுடன் இணைந்து, விட்டுக்கொடுத்து முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை தேர்ந்தெடுக்க உதவுவாரா?
முஸ்லிம் முதலமைச்சர் என்பது, முஸ்லிம்களுக்கு இலவு காத்த கிளிதான்!
kilakku maahanathil irunthu oru MP inaium kondirathe akila ilankai makkal congress CM post ketpathu vedikkaiyahe ullathu.
ReplyDeleteநாட்டில் யாரும் யாருடனும் சமாதானமாக,ஒற்றுமையாக இருப்பது பெரும்பான்மை சக்திகளுக்கு அலர்ஜி .எவர் முதலமைச்சராக வந்தாலும் எடுப்பார் கைப் பிள்ளையாகத்தான்
ReplyDeleteஇருக்க வேண்டும் .மூவேந்தர் கண் அசைவுக்கு இவர்கள் ஆடினால்தான் தொடர்ந்து அரசியல் விளையாட்டு விளையாடலாம் .
Meraan