சனத்தொகை கணக்கெடுப்பில் குழப்பம் - முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பலத்த சந்தேகம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் 15 இலட்சமே முஸ்லிம்கள் எனக் கூறப்பட்டமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு நடவடிக்கைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவின் மகனும், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சனத்தொகை கணக்கெடுப்பின்படி 15 இலட்சம் முஸ்லிம்கள் என்பது நம்புவதற்கு கடினமான விடயம் என முஸ்லிம்கள் தரப்பில் சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் சனத்தொகை மதிப்பீடு செய்த அதிகாரிகள் இதுவரையில் எனது வீட்டுக்கு வரவில்லை. அப்படியானால் நான் கள்ளத்தோணியா? என முன்னாள் பிரதமரின் மகனும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், எனது வீட்டுக்கு வந்ததாகத் தெரிவித்து பிரதேச செயலாளர் பணம் பெற்றுக் கொண்டிருப்பார். இந்த சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மெய்யாக மேற்கொள்ளப்பட்டனவா? இலங்கையில் நடைபெற்ற சனதொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் உண்மையான தரவுகள் பிரதிபலிக்கப்படவில்லை என்பதனை எந்த இடத்திலும் தெரிவிக்கத் தயார் என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், எனது வீட்டுக்கு வந்ததாகத் தெரிவித்து பிரதேச செயலாளர் பணம் பெற்றுக் கொண்டிருப்பார். இந்த சனத்தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் மெய்யாக மேற்கொள்ளப்பட்டனவா? இலங்கையில் நடைபெற்ற சனதொகை மதிப்பீட்டு நடவடிக்கைகளில் உண்மையான தரவுகள் பிரதிபலிக்கப்படவில்லை என்பதனை எந்த இடத்திலும் தெரிவிக்கத் தயார் என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இவ்வாறு பகிரங்கமாக சனத்தொகை கணக்கெடுப்பு பற்றிய விபரங்களை விமர்சித்திருக்கையில் முஸ்லிம்கள் பற்றிய கணக்கெடுப்பில் தவறுகள் இடம்பெற்றதற்கான வாய்ப்புகளை நாம் மறுப்பதற்கில்லை.
அத்துடன் சனத்தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து காணப்படும் பட்சத்தில் முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதி போன்ற விவகாரங்களும் கோரிக்கைகளாக வலுப்பெற்றிருக்கும்.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை பற்றிய சந்தேகங்கள் இவ்வாறு வலுவாக காணப்படும் நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில் போன்ற அமைப்புக்கள் முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு, அதுபற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் உண்மையான எண்ணிக்கை இருபது லட்சத்திற்கும் அதிகம் என்பதை ACJU தலைவர் பல முறை கூறிவிட்டார். இன்றைய நிலவரத்தின் படி இலங்கையில் முஸ்லிம்களின் விகிதாசாரம் பத்து விகிதத்திட்கும் அதிகம். ஆனாலும் அரசாங்கம் அதனை வெளியிட பின்வாங்குவது ஐந்தாம் பந்தியில் கூறிய விடயங்களை தவிர்ப்பதட்கேயாகும். அத்துடன் பெரும்பான்மை சமூகத்தின் விகிதாசார வீழ்ச்சியையும் மறைப்பதற்கே இப்படிப்பட்ட தவறான தரவுகள் வெளியிடப்படுகின்றன.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் தனிப்பட்ட ரீதியில் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமொன்றின் மூலம் தனது சனத்தொகை;க கணிப்பீடு குறித்து மதிப்பிட்டு அரசுக்கும் ஊடகங்களுக்கும் முன்வைத்தல் குறித்து சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteI SECOND IT!
ReplyDelete