விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பிரிட்டனிலிருந்து நாடுகடத்த அனுமதி
விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டனிலிருந்து சுவீடனிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கைக்கு லண்டனிலுள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜூலியன் அசாஞ்சாவுக்கு எதிராக சுவீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு இருக்கிறது.
சுவீடனின் கோரிக்கை சட்டமுரணானது என்றும் அவரை அங்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றத்திலிருந்த 7 பேரடங்கிய நீதிபதிகள் குழுவில் ஐந்து பேர் நிராகரித்தனர்.
அமெரிக்காவின் ரகசியத் தகவல்கள் கசியவிடப்பட்டக் குற்றச்சாட்டுகளுக்காக அவரை சுவீடன் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடலாம் என்று அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர்.
ஜூலியன் அசாஞ்சே சுவீடனிடம் ஒப்படைக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அவருக்கு சந்தர்ப்பம் இருக்கிறது.

Post a Comment