Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஈரான் நாட்டு உதவிகள் - தூதுவருடன் சுபியான் மௌலவி சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் கலாநிதி எம்.என்.ஹஸ்ஸானிபூர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம்செய்து அங்கு மீள்குடியேறும் முஸ்லிம்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து ஈரான் நாட்டு உதவிகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

யாழ் மாநகர சபையின் உறுப்பினர் மௌலவி சுபியான் அண்மையின் ஈரான் நாட்டு தூதுவரை சந்தித்திருந்தார். இதன்போதே ஈரான் தூதுவர் ஹஸ்ஸானிபூர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

ஈரான் தூதுவருக்கும், மௌலவி சுபியானுக்குமிடையே நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேச நிலவரங்கள், மற்றும் மீளக்குடியேறியுள்ள மக்களின் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.


4 comments:

  1. MOU.SUFIYAN SEEYAKALODUM POHAVITTAL,SARI IRANIYARKAL THANGAL KOLGAIKALAYUM PUHUTTIVIDUVAARKAL EVARKALIN OODURUVALAI TEN PAHUTIYULUM PARKKIROM EVARKALAI MUSLIMKAL ENRU ETTUKONDAAL NAAM KAFIRHALAAHI VIDUVOM.MUSLIM

    ReplyDelete
  2. ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்



    - M.S.M. இம்தியாஸ் ஸலபி
    காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.
    நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.
    இப்புனித மார்க்கத்தை கட்டிகாப்பதற்கும் வளர்ப்பதற்கும் மண்ணில் நிலைநாட்டுவதற்கும் தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் தங்களது பொருளாதாரத்தையும் அர்ப்பணித்தவர்கள் தான் சஹாபாக்கள். அல்லாஹ்வையும் அவனது இறுதித்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் ஈமான் கொண்ட ஒரே காரணத்திற்காக காபிர்களின் நிந்தனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளாகி உயிர்களை இழந்தவர்கள் உடமைகளை துறந்தவர்கள். உடுத்த ஆடைகளுடன் மேடுபள்ளங்களை கடந்து இரவு பகலாக பயணித்து அகதிகளாக அநாதைகளாக மதீனாவில் தஞ்சம் புகுந்து தூய மார்க்கத்தை வளர்த்தவர்கள் சஹாபாக்கள்.
    இந்த உத்தமர்களின் செயற்பாடுகளை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்கள்தான் உண்மையான முஃமின்கள் வெற்றியாளர்கள் சுவனத்தின் வாரிசுகள் என்று போற்றி புகழ்கிறான். தியாகத்தின் செம்மல்களான இந்த சஹாபாக்களை முனாபிக்குகள் நயவஞ்சகர்கள் அனியாயக்காரர்கள் முர்தத்கள் என்று இந்த ராபிளா ஷீஆக்கள் தூற்றுகிறார்கள் சபிக்கிறார்கள். “ராபிளாகள்” என்று அழைக்கப்படுவதற்கு பிரதான காரணமே அவர்கள் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்க மறுத்ததேயாகும். இந்த உம்மத்தில் சஹாபாக்களை முஃமின்கள் என்று அழைக்காது விட்டால் வேறுயாரைத்தான் அழைப்பது? ஷீஆவின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை அறியாத அப்பாவிமக்களும் படித்தவர்களும் ஊடகவியலாளர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.
    ஷீஆவின் தோற்றம்
    நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி சுமார் 30 வருடங்களுக்கு பின் உருவானதுதான் இந்த ராபிளா எனும் ஷீஆ பிரிவாகும். சன்ஆ எனும் பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருறுவினான். பிறப்பின் அடிப்படையில் இவன் ஒரு யஹூதி. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவு தான் ஷீஆவாகும். அரசியல் லாபம் தேடி ஒற்றுமையாக ஒரே உம்மத்தாக உஸ்மான்(ரலி) அவர்களது தலையின் கீழ் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவுப்படுத்தி கலவரத்தை உண்டுபண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியவனாவான். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக் களரி இன்றுவரை ஷீஆ சுன்னி என்று ஓடிக்கொண்டிருக்கிறது.
    ஷீஆக்கள் (அலி) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவிப்பதாகவே அரசியல் பிரவேசம் செய்தனர். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு பின் அலி (ரலி) அவர்கள்தான கிலாபத் (இமாமியத்) பொறுப்புக்குரியவர். அதனை அபூபக்கர் உமர் தட்டிப்பறித்து விட்டனர். இவர்கள் அலி(ரலி)க்கு அநீதி இழைத்து விட்டு அலியிடம் மன்னிப்புக் கோராமலே மரணித்து விட்டனர். எனவே அவர்கள் இருவரும் மீதும் அல்லாஹ்வினதும் மக்களினதும் சாபம் உண்டாகட்டும் என சபிக்கின்றனர் (நூல்.அல்காபி:8-245)
    Jaffna Muslim
    UK

    ReplyDelete
  3. தூதுவரே,
    ஈரான் நாட்டு உதவியை மட்டும் தருவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
    உதவியை ஒரு தூண்டிலாக பயன்படுத்தி ஈரான் நாட்டு மார்க்கத்தை திணிக்க முயல வேண்டாம்.

    மவ்லவி சுபியான் அவர்களே,
    ஈரான் நாட்டு உதவிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்.
    ஈரான் நாட்டு மார்க்கத்தை தவிர்ந்து கொள்ளுங்கள்.
    உலக வாழ்க்கையில் உதவி செய்யப் போய், மறுமை
    வாழ்க்கையில் நீங்களும், உதவி பெறப் போகும் மக்களும்
    நஷ்டமடைந்து விடாமலிருக்கட்டும்.

    ReplyDelete
  4. அமைச்சர் ரிஷாத்தும் தூதுவரை சந்தித்துள்ளார் ஏன் சுபியான் மௌலவி சந்திததுக்கு மட்டும் இவ்வளவு கமெண்ட்ஸ் யாழ் முஸ்லிம்களுக்கு உதவி கிடைப்பது உங்களுக்கு விருப்பம் இல்லையா?ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து உதவி பெற்றால் உங்கள் கருத்துப்படி அவர்கள் முஸ்லிம்களா?வெளி நாட்டில் இருந்து கமெண்ட்ஸ் எப்படியும் எழுதலாம் என்னைபொருத்தவரை மீள் குடியேற்றம்தான் முக்கியம் அதற்காக இஸ்லாத்தை மறந்து விட்டு அல்ல.ஊக்கப்படுத்துங்கள் சோர்வடையச்செயாதீர்கள் அவரால் என்ன முடியுமோ அதை அவர் செய்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.