கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரை நாடு கடத்துமாறு கோரிக்கை
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை நாடுகடத்துமாறு தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அதன் அரசியல்சபை உறுப்பினர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக இதனை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள இராணுவ முகாம்கள் குறித்து தீர்மானிக்கும் உரிமை இலங்கையிடம் மாத்திரமே இருக்கிறது. இது குறித்து வேறு யாரும் கருத்து கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்மையில் கோரி இருந்தார். இந்த நிலையில் அவரை நாடுகடத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

siridu kalattitkavadu RANUVA MUHAMKAL DEVAI ITH DEVAIYAI TAMILARKALUM NANGKUNARVAR.SALEEM
ReplyDelete