இலங்கைக்கும் சைபர் தாக்குதல் எச்சரிக்கை - ஈரானின் சொப்ட்வேயார் உதவுமா..?
ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொலைத் தொடர்புகள் சங்கம் உலகளாவிய ரீதியில் சைபர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வரலாற்றில் விடுக்கப்பட்ட மிகவும் பாரதூரமான அபாய எச்சரிக்கை இதுவாகும் என ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகின்ற ஐ.நா.வின் சர்வதேச தொலைத் தொடர்புகள் சங்கத்தின் சைபர் பாதுகாப்பு இணைப்பதிகாரி மாக்கோ ஒபிசோ கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் வியாபித்து வருவதாக அண்மையில் இனங்காணப்பட்ட ஃப்ளேம் எனும் கணனி வைரசிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா.வின் சர்வதேச தொலைத் தொடர்புகள் சங்கம் தமது உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பல வருடங்களாக சைபர் தளத்தில் காணப்பட்ட வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ரஷ்யாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல இணையத்தள பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நேற்று முன்தினம் அறிவித்தது.
ஃப்ளேம் வைரஸ் தொடர்பாக இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இலங்கை கணனி அவசர பிரதிபலிப்பு ஒன்றியத்தின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தவிடம் வினவினோம்.
இந்த வைரஸைப் பயன்படுத்தி பிரபல நிறுவனங்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென அவர் தெரிவித்தார். இந்நிலையில், தனி நபர்களின் கணனிகளுக்கு இந்த வைரஸினால் தாக்கம் மிகவும் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளான கணனிகளைப் பாதுகாப்பதற்கான மென்பொருளொன்றை ஏற்கனவே ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை கணனி அவசர பிரதிபலிப்பு ஒன்றியத்தின் பாதுகாப்பு பொறியியலாளர் கூறினார். குறித்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற முடியுமா, என்பது குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரானுக்கு நல்ல வருமானம்.
ReplyDeleteதகவல் செய்திகள் கணணி வைரஸ், இணைய வைரஸ் என்று காலம் காலமாக
அழுதுகொண்டு இருக்கின்றனவே தவிர, இவற்றை வடிவமைத்த யாராவது கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப் பட்டதாக ஒரு செய்திக் கூட வருவதில்லை.
தமது அன்டி வைரஸ் சொப்ட் வெயார்களை விற்பனை செய்வதற்காக, இவர்களே இவற்றையும்
தயார் செய்து பரப்புகின்றார்களோ தெரியவில்லை.
அதுதான் உண்மையும் கூட,விலைகளும் மிக அதிகமாக இருக்கிறது.
ReplyDeleteMeraan