அல்ஹைதாக்களை தேடும் ஒபாமா..?
பாகிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கி இருக்கும் அல் குவைதா அமைப்பினரில் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஆய்வு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஒபாமா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா தயாரித்து வரும் கொல்லப்பட வேண்டிய அல் குவைதா அமைப்பினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்களை ஒபாமாவே தீர்மானிப்பதாகவும், அவர்களை எவ்வாறு அருகில் மற்றும் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்துவது என்பது குறித்தும் ஒபாமா முடிவு செய்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒபாமாவின் பார்வையில் உலகின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவே முக்கிய பொறுப்பு வகிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது வரை 12 முக்கிய அல் குவைதா தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment