Header Ads



மக்கள் பணத்தில் அரசாங்க வைத்தியர்களானவர்கள் பணி பகிஷ்கரிப்பு - நோயாளர் பெரும் சிரமம்



அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

நாட்டின் அனேகமான வைத்தியசாலைகளில் இன்று சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

வைத்திய அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவு 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் உப்புல் குணசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஜித் மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.