Header Ads



மஹிந்தவின் நல்லாட்சிக்கு தீங்கு விளைவிக்க முயற்சி - ஹஸன் மெளலானா



மத உணர்வுகளை தூண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நல்லாட்சிக்கு ஊறுவிளைவிப்பதற்கும் சமாதானத்தை சீர்குலைக்கவும் சில தீய சக்திகள் முயற்சி செய்வதாக ஜனாதிபதியின் முஸ்லிம் சமய விவகாரங் களுக்கு பொறுப்பான இணைப்பாளர் கலாநிதி ஹஸன் மெளலானா தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள சகல மதங்களையும் கெளரவித்து அவற்றின் உரிமைகளையும் உறுதிப்படுத்தி நாட்டை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லுவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரதான குறிக்கோள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் தான் நான்கு மதங்களையும் கெளரவித்து அவற்றுக்கென தனித் தனியான இணைப்பாளர்களையும் நியமித்து ஜனாதிபதி செயலகத்திலேயே அவர்களுக்கென அலுவலகங்களையும் ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நாட்டில் இன, மத ஒற்றுமை சீர்குலைக்கப்பட ஜனாதிபதி ஒருபோதும் இடமளிக்க மாட்டார் எனவும் அவர் கூறினார்.

முப்பது வருடங்களின் பின்னர் அமைதி சமாதானத்தை எமது ஜனாதிபதி இந்நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கின்றார். இதனை இந்நாட்டு மக்கள் சகலரும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள். இதனைச் சீர்குலைப்பதற்கே இத்தீய சக்திகள் முயற்சி செய்கின்றன. இது குறித்து ஒவ்வொருவரும் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முப்பதுவருடங்களின் பின்னர் இந்நாட்டில் வாழுகின்ற சகல இன, மத, மக்களும் அச்சம், பீதியின்றி சுதந்திரமாக நடமாடுகின்றார்கள். சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் வாழுகின்றார்கள். நாடு துரித அபிவிருத்தி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. பிராந்தியத்தில் சக்தி மிக்க நாடாக எமது தாயகம் மாறி வருகின்றது.

இவற்றைப் பொறுத்துக் கொள்ளமுடியாத தீய சக்திகள் மத உணர்வுகளைத் தூண்டி நாட்டை மீண்டும் சீரழிப்பதற்காக முயற்சி செய்கின்றன. இதற்கான சதிச் சூழ்ச்சிகளில் அச்சக்திகள் ஈடுபட்டிருக்கின்றன. வெளிநாடுகளிலுள்ள சில தீய சக்திகளும் இவற்றுக்கு உதவுவது போல் தெரிகின்றது.

ஆகவே நாட்டையும், நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைதி, சமாதானத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொருபிரஜையும் இச்சூழ்ச்சிகளில் சிக்கிவிடாது அவற்றை முறியடிப் பதற்காகப்பாடுபட வேண்டும். ஜனாதிபதி ஏற்படுத்தித் தந்திருக்கும் அமைதி, சமாதானம் காலாகாலமாக நாட்டில் நிலைத்திருக்க வேண்டும். இதற்காக உழைப்பதே இந்நாட்டுப் பிரஜைகளின் முதற் தரப் பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.

3 comments:

  1. why the president does not open the mouth regarding this matter?

    ReplyDelete
  2. if it is true, why dont take any action for regarding dambulla, dehiwala, kurunagala mosque

    ReplyDelete
  3. (ஏக இறைவனை)மறுப்போர் ,உங்கள் மார்க்கத்தை பற்றி (அளித்துவிடமுடியுமென்று)இன்று நம்பிக்கை இழந்துவிட்டனர் .
    எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்,எனக்கே அஞ்சுங்கள் இன்றையதினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு
    செய்து விட்டேன்.எனது அருளை முளுமைபடுத்திவிட்டேன்;5 :3
    பட்சைபோர்வை போர்த்தியவர்களே அல்லாவுக்கு பயந்து கொள்ளுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.