றிசாத்திற்கு ஆதரவாக சீறிப்பாய்கிறார் ஹூனைஸ் பாருக் எம்.பி.
gtn
மத நல்லிணக்கம் பேசியதற்காகவா காதரின் மீது கொலைவெறித் தாக்குதல்? சிவசக்தி ஆனந்தன் கேள்வி என்று வெளியான செய்தியில் நாம் ஒரு போதும் உடன்பாடு கானமாட்டோம், உண்மைக்கு புறம்பான தகவல்களை திருகி தமக்கு உரித்தான பாணியில் தமிழ் பேசும் சமூகத்தை காட்டிக் கொடுத்துவரும்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அறிக்கை குறித்து தெளிவை வாசகர்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக நான் கருதுகின்றேன்.மன்னார் பகுதி மூத்த ஊடகவியலாளர் என தெரிவிக்கப்படும் எம்.ஏ.காதர் தாக்கப்பட்ட சம்பவத்தை சிவசக்தி ஆனந்தன் கண்டித்திருப்பது குறித்து நாம் கருத்து கூறவிரும்பவில்லை. அது அவருடன் தொடர்புபட்ட விடயம்.
மன்னார் ஆய்யர் ராயப்பு ஜோசப் அவர்களின் சில செயற்பாடுகள் வடக்கில் வாழும் மக்களுக்கு தொடரான இடைஞ்சல்களை ஏற்படுத்திவருவது குறித்தும் மக்கள் எம்மிடம் பல முறை முறையிட்டுள்ளனர்.இந்த முறைப்பாட்டை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல,இருப்பினும் அவர் சார்ந்த சமூகம் அதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ளட்டும் என்று பொருமையாக நாம் இருந்து வந்தோம்.
வன்னியில் வாழும் தமிழ் பேசும் மக்களை வன்னி தமிழர்கள் என்று பிரித்து அவர்களை காட்டிக் கொடுத்து அரசியல் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள்,அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்து அநாகரிகமான வசனங்களைக் கொண்டு துற்றி இருப்பதை கண்டு மௌனமாக இருக்க முடியாது.என்னன்றி கொண்டோருக்கு உய்வுண்டாம் செய் நன்றி கொண்ட மகற்கு என்ற மொழிக்கமைய நன்றி மறந்த ஒருவனாக சிவசக்தி ஆனந்தன் மாறியிருப்பது மிகவும் கவலைத் தருகின்றது. அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வன்னி மாவட்ட மூவின மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டு அதிகப்படியான வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர் தமது வன்னி மக்களின் விமோசனத்திற்காக அமைச்சு பொருப்புக்களை சுமந்தவர்.இதற்கு இடம் பெற்ற தேர்தல்களிலெல்லாம் மக்கள் அமைச்சருக்கும்,அவர் சாரந்த வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை வாரி வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளனர் என்பதை சிவசக்தி ஆனந்தனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது,எப்போதும் இருண்ட யுகத்தை ஏற்படுத்த துடித்தவரின் உள்ளம் இருளாகத்தான் இருக்கும் என்ற யதார்த்த்தை நாம் நன்கறிவோம்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது,அவரது அருகில் இருந்தவன் நான் என்ற வகையிலும்,பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தனர்.இதற்கான ஆதாரங்கள் அன்றைய பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் உள்ளது.கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.35 மணியிவில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நல்லிணக்க ஆணைக்குழுவின் செய்ற்பாடுகள் குறித்து ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சமர்பித்த சபை ஒத்தி வைப்பு பிரோரணையின் போது இந்த உரையாற்றினார்.அப்போது அமைச்சர் றிசாத பதியுதீன் தமது உரையில் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்கள் புத்தளத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் இன்னும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தற்போது தாம் வாழந்த வடக்கின் சொந்த மண்ணுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.துரதிஷ்டம் அவர்களது சொந்த இடங்களுக்கு வந்து பார்த்த போது,அவைக்ள் காடுகளாகவும்,முற்புதர்களாகும்,மதவழிபாட்டு தளங்கள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அழிந்து போயுள்ளன.
அதே வேளை முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களில் தமிழ் சகோதர மக்கள் குடியமர்ந்துள்ளனர்.நாம் அந்த மக்களை வெளியேறுங்கள் என்று சொல்லவில்லை,மாறாக எமது முஸ்லிம் மக்களுக்கும் அருகிலுள்ள இடங்களை கொடுக்க உதவி செய்யுங்கள் என்று கேட்டோம். அதே வேளை இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வாருங்கள் என்று சம்பந்தன் அய்யா அவர்கள் அழைப்பு விடுத்தமைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் நன்றி தெரிவித்தார். முஸ்லிம்க்ள் மீள்குடியேற வந்த போது,மண்டிக்கிடந்த மண்மேடுகளும்,சூழந்து கிடந்த காடுகளும் அவர்களின் தற்காலிக கொட்டில்களை அமைக்க அழிக்கப்பட வேண்டிய நிலையேற்பட்டது.அதனை செய்ய முற்பட்ட போது,மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் ஜனாதிபதிக்கு பிழையான தகவல்களை கொண்ட கடிதமொன்றை அனுப்பி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
ஆயர் அனுப்பிய கடித்தத்தின் பிரதியினை அமைச்சர் பாராளுமன்றத்திலும் காட்டியதுடன்,தற்போது தம்புள்ள பகுதியல் பௌத்த பிக்குகள் முஸ்லிம்களின் மத்த் தளத்தை சேதப்படுத்தி அங்கிருந்து முஸ்லிம்களை விரட்டும் செயலை செய்கின்றனர்..மன்னார் ஆயர் அவர்களும் இதற்கு ஒப்பான வகையில்ஜனாதிபதிக்கு கடிதம எழுதுவதன் மூலம் தமது செயல்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார் என அமைச்சர் றிசாத் பதீயுதீன் கூறினார்.அந்த வேளை சபையில் இருந்த எந்தவொரு தமிழ் கூட்டமைப்பின் பிரதி நிதிகளும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.அப்படியெனில் அமைச்சர் ஆற்றிய உரையின் உண்மையை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்ற முடிவுக்கு வரலாம் .ஆனால் அதனையடுத்து பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்த பிறகு,எரிகிற் வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற பழமொழிக்கு ஒப்ப,அமைச்சரின் கருத்து திரித்து,அதற்கு இனசாயம் பூசி, அன்று ஆயுதங்கள் மூலம் எதை சிவசக்தி ஆனந்தன் போன்றவர்கள் செய்தார்களோ,அதே போன்று மீண்டும் செய்வதற்கான அடித்தளத்தை இடுவதே அவரது இந்த அறிக்கையின் நோக்கமாகும்.அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் ஆயர் குறித்து கூறாத வார்த்தைகளை ,சிவசக்தி ஆனந்தன் ஆயரை மத்த்தீவிரவாதி என்று கூறியிருப்பது கவனிக்கப்பட வேண்டியதொன்று.
மன்னார் ஆயர் அடாத்தாக காணியினை பிடித்தாரென்றோ,அடாத்தாக அவரது சமூகம் சார்ந்தவர்களை வலுக்கட்டாயமாக குடியேற்றினாரா?இல்லையா? என்பது குறித்தும்,அமைச்சர் றிசாத்பதியுதீன் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.மன்னார் ஆயரை அவமானப்படுத்தி அதன் மூலம் தமது அரசியல் பிழைப்பை செய்வதே சிவக்தி ஆனந்தனினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தென்படுகின்றது.மன்னார் ஆயர் அவர்கள் மக்களுக்கு பணிசெய்கின்றார் என்றால் அதை கர்த்தர் ஏற்றுக் கொள்வார்.அதேபோன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட ,நானும் எம்மை சர்ந்தவர்களும் மக்கள் பணி செய்கின்மெனில் அதற்கு இறைவனிடத்தில் எமக்கான நன்மைகள் கிடைக்கும் என் நம்பிக்கையை கொண்டவர்கள் நாங்கள். இது தான் மத நம்பிக்கையென்பதை சிவசக்தி ஆனந்தனுக்கு புரிய வைக்கவிரும்புகின்றேன்.
வன்னி இறுதி யுத்தத்தின் போது நந்திக்கடல் வழியாக வந்த தமிழ் மக்களை பாதுகாப்பாக மெனிக் பார்ம் நல்புரி நிலையத்துக்கு கொண்டு வந்து,அம்மக்களுக்கு தேவையான உணவு,உடை,ஏனைய வசதிகளை அன்று மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது,செய்த பணிகளை நன்றியில்லாத சிவகச்தி போன்றவர்கள் மறந்தாலும்,தமிழ் மக்கள் இன்றும் அதனை நினைவுபடுத்தி நாம் செல்கின்ற கிராமங்களிலெல்லாம் நன்றி தெரிவிக்கின்ற நிலையினை பாரப்பதற்கு இறைவன் சிவசக்தி போன்றவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை.
இவ்வாறு முகாம்களில் இருந்த மக்களை இரவு பகலாக சென்று பார்வையிட்டு அவர்களது தேவைகளை செய்து கொடுத்த ஒரு துய்மான அப்பழுக்கற்ற அரசியல் தலைவரை நிந்திப்பது தான் சிவசக்தியின் நியாயமா ?மக்களின் உரிமைக்காக போராடுவதாக கூறி தமிழ் மக்களின் உயிர்களை ,உடமைகளை,அழித்தொழித்து யுத்தத்தை நடத்த வக்காளத்து வாங்கி வயிறுவளர்த்த சிவசக்தி ஆனந்தன் ,இன்று அந்த மக்களுக்காக பேசுகின்றோம் என்று பிதட்டுகின்ற வார்த்தைகளை மக்கள் இனியும் ந்ம்பத் தயாரில்லை. 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த கிராமத்தில் முடியுமான வசதிகளுடன்,மீள் குடியேற்றியமைக்காக சர்வதேச நாடுகளின் பாராட்டை பெற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனை அநியாயாமாக பேசுவது மடமைத்தனமாகும்.
மெனிக்பார்ம் முகாம்களில் தமிழ் தலைவர்களின் பெயர்களை சூட்டுவதற்கு அனுமதியளித்தவர் அன்றைய மீள்குடியேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களே,அதேபோல் அங்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணிகளை செய்வதற்கு அனுமதியளித்தவரும் அவரே,அப்படியென்றால் எவ்வாறு அமைச்சர் றிசாத், ஆயரின் தயவை நாடியிருக்க முடியும்.குறிப்பாக ஆனந்த குமார சுவாமி வலயத்தில் 100 கத்தோலிக்க மதகுருமார்களுக்கான தனியான தற்காலிக வீடுகளை அமைத்து அவர்களது மதப் பணியினை முன்னெடுக்க வழி செய்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை அவருக்கெதிராக செயற்படவிரும்பாத பல அருட் தந்தையர்கள் எம்மிடம் நினைவுபடுத்தியதை கூற வேண்டும்.
.தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால்,மீண்டும் வனினியில் தமிழ் மக்கள் பெரும் சோதனைகளை சந்திப்பார்கள்,அனைத்தையும் இழந்து அழிவினையே பெற முடியும் என்பதை நன்கறிந்த வன்னி வாழ் தமிழ் மக்கள் மதங் கடந்து மனித நேயம்,நம்பிக்கை வைத்து அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வாக்களித்தார்கள் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.அந்த நம்பிகை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.சிவசக்தி ஆனந்தனுக்கு அரசியல் தெரியாது,ஆயுதத்தால் எதையும் செய்ய முடியும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டதால் எதையாவது பேசுகின்றார்.மன்னார் ஆயருக்காக நடத்தப்ட்ட விசேட பிரார்த்தனையில் முஸ்லிம்கள் கலந்து கொண்டார்கள் என்பதில் தெளிவில்லாத தன்மை காண்ப்படுகின்றது.ஏற்கனவே சிவசக்தி ஆனந்தன் கூறியது போன்று திரு.காதர் அவர்கள் ஒரு ஊடகவியலாளர்,அவரை பொறுத்த வரை அங்கு இடம் பெறும் தகவல்களை மக்களுக்கு சரியாக அவர் சார்ந்த ஊடகங்களுக்காக அனுப்பி வைப்ப்பது தான் அவரது பணியாகும்.அந்த வகையில் அவர் அதில் கலந்து கொண்டிருக்கலாம்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு சொந்தமான காணிகளை வேறு ஒருவர் அபகரித்தால்,அவர் நீதிமன்றம் மூலம் நியாயத்தை கோறி வழக்கு தாக்கல் செய்வார்.அதைவிடுத்து அடவடித்தனம் செய்யும் அரசியல் சரிவை கொண்ட ஒருவாராக சித்தரிக்க முனைவது,சிவசக்தி ஆனேந்தனின் இயலாமையினையே காட்டுகின்றது.அவசியம் ,வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது ஒரு அறிக்கையினை கூடவிடுவதற்கு துப்பில்லாத சிவக்தி ஆனந்தன் போன்ற எம்.பிக்கள் இன்று தமிழ் மக்கள் குறித்தும்,முஸ்லிம்கள் குறித்தும் முதலைக்கண்ணீர் வடிக்கும் அவல அரசியல் பித்து விளையாட்டை செய்வதை எமது வன்னி மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.தமிழ் பேசும் மக்களை உணரச்சிவசப்படுத்தி தமது அரசியல் கதிரைகளை தக்க வைக்க காலத்துக்கு காலம் உருப்டியில்லாத அறிக்கைகளை விட்டு அதன் மூலம் தலைவர்களாக மாறலாம் என மனப்பால் அருந்தும் சிவசக்தி ஆனந்தன் போன்ற அரசியல் வாதிகளை வன்னி மாவட்ட தமிழ் சமூகம் துரமாக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை .
இவ்வண்ணம்
சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்
பாராளுமன்ற உறுப்பினர்-வன்னி மாவட்டம்

சேர் இது நல்ல முயற்சி..உறுதியுடன் செயற்படுங்கள்...சத்தியம் நிலைக்கும்
ReplyDelete