Header Ads



முஸ்லிம்களை வேட்டையாடிய மிலடிச் மீதான போர்க்குற்ற சிசாரணை மீண்டும் ஆரம்பமாகிறது



தெரிவிக்கப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொஷ்னிய சேர்பிய இராணுவத் தளபதி ரட்கோ மிலடிச் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இவருக்கு எதிராக சுமத்தப்பட்டு விசாரிக்கப்படாத குற்றங்களுக்கான விசாரணைகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மனித உரிமைகளை கடுமையாக மீறிய குற்றச்சாட்டுக்களை அடுத்து, ரட்கோ மிலடிச் கைதுசெய்யப்பட்டிருந்தார். 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமைக்கு இவரே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொஷ்னிய - சேர்பிய யுத்தத்தின்போது இந்தப் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.