Header Ads



மிலிந்தவின் இடத்திற்கு குலதிஸ்ஸ நியமனம்



கொழும்பு மாநகர சபையில் வெற்றிடமாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்    பதவிக்கு குலதிஸ்ஸ கீகனேக  நியமிக்கப்படவுள்ளார். கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவி வகித்துவந்த மிலிந்த மொரக்கொட அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்திருந்தார்.

இதையடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கொழும்பு மாநகர சபையில் பதவி வெற்றிடம் காணப்பட்டது. இதையடுத்தே அப்பதவிக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் குலதிஸ் நியமனம் பெறுகிறார்.

கொழும்பு மாநகர சபைக்கு கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் போட்டியிருந்த இவர் 3559 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபை கூடுகின்ற வேளை இவர் உறுப்பினராக பதவியேற்றுக்கொள்வாரரென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.