அமைச்சர் றிசாத் பதியுதீன் மதத் தீவிரவாதியாக மாறிவிட்டாராம்..!
மன்னார் ஆயர் இராயப்புஜோசப் அவர்களின்மீது அவதூறு கற்பித்த அமைச்சரின் செயலுக்கு வருந்தி கத்தோலிக்க மக்கள் மேற்கொண்ட பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னார் ஊடகவியலாளர் எம்.ஏ.காதர்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத நல்லிணக்கம் பேசியதற்காகவா காதர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மன்னார் ஆயர் அவர்கள் யுத்தத்தின்போதும், யுத்தம் முடிவடைந்த பின்னரும் தனது இறைபணியுடன் சேர்த்து சமுதாயப் பணிகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருவதை நான் சொல்லி உலகம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. நலிவடைந்த மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதே இறைவனுக்குச் செய்கின்ற அளப்பரிய பணி என்று திடசங்கல்பம் பூண்டு சமூக அக்கறையுடன் மனிதாபிமானத்துடன் பணியாற்றி வருகின்ற மன்னார் ஆயரை தென்பகுதிப் பெரும்பான்மையினத்தின் மததீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு அவரைச் சாடியிருப்பது வன்னித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சராகியிருக்கின்ற றிஷாத்திற்கு அழகல்ல.
அமைச்சர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மன்னார் ஆயர் ஒருபோதும் மக்களை மதரீதியாகப் பிரித்துப்பார்த்தது கிடையாது. இது அமைச்சருக்கும் தெரியும். ஒருபோதும் அவர் அடுத்தவரின் சொத்தை அபகரிக்கவோ அல்லது வேற்றுமதத்தவர்களை நிந்திக்கவோ இல்லை என்பதும் அமைச்சருக்குத் தெரியும்.
ஆயர் அவர்கள் எந்த நேரத்திலும் அடாத்தாக அடுத்தவர்களின் காணியைப் பிடித்து அங்கிருப்பவர்களை எழுப்பி தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தனது மதத்தைச் சார்ந்தவர்களை அவர்கள் விரும்பாதபோதும் வலுவில் குடியமர்த்தவில்லை. மாறாக தேவாலயத்திற்குச் சொந்தமான காணிகளில் ஏழைமக்களுக்கு வீடுகட்டிக்கொடுத்துள்ளதுடன், பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு தமது குடும்ப வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்வதற்கும் வழிசெய்துள்ளார். இதில் எதை அமைச்சர் செய்துள்ளார் என்பதை மக்கள் நன்கறிவர். தனது தொகுதி மக்கள் யுத்தத்தில் பாதிப்புற்று முட்கம்பி வேலிகளுக்கு மத்தியில் வாடியபோது அவர்களுக்கு நேரகாலத்திற்கு உணவளிக்கக்கூட வக்கற்றவராக இருந்த அமைச்சருக்கு ஆயரைப் பற்றிப் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது?
அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இருந்தபோது, ஒரு அசாதாரண சூழ்நிலையில் வன்னி மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோது, அவர்களுக்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்ய வக்கற்ற அமைச்சர் மதரீதியாக ஆயரை வம்பிற்கு இழுப்பது என்ன நியாயம்? அன்று வலயம் ஒன்று என்று அழைக்கப்பட்ட ஆனந்தகுமாரசாமி முகாமில் தங்கியிருந்த அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்தது கிறித்தவ அமைப்பான கரித்தாஸ் நிறுவனம் என்பதை அப்போதைய மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக இருந்த றிஷாத் மறந்துவிட்டாரா? அப்போது ஆயரை அடிக்கடி தொடர்புகொண்டு பாராட்டியதை அமைச்சர் மறந்துவிட்டாரா?
மீள்குடியேற்றம் என்ற பெயரில் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டபோதும், தன்னால் இயன்றவரை மக்களுக்கு உதவிகள் செய்த ஆயரின் வேகத்தைக்கண்டு அவரின் பணிகளை முடக்கியதை அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். அப்பொழுது தமிழ்ச் சமூகம் நினைத்திருந்தால் அல்லது கிறித்தவ சமூகம் நினைத்திருந்தால் அமைச்சரின் மதத்தைப் பயன்படுத்தி அமைச்சரின்மீது சேறுபூசியிருக்க முடியும். ஆனால் பண்புள்ள எவரும் கொள்கைப் பிடிப்புள்ள எவரும் மதத்தை ஒரு ஆயுதமாகப் பாவிக்க மாட்டார்கள். இஸ்லாமிய சகோதரர்கள்கூட ஒருபோதும் மதரீதியாக ஏனைய தமிழ் மக்களுடன் மோதலில் ஈடுபட்டதில்லை. ஆனால் அமைச்சர் தனது பொறுப்பை மறந்து தீவிரமதவாதியாகவே மாறிவிட்டிருப்பது வேதனை அளிக்கின்றது. இன, மத, மொழி பேதமற்று மக்களுக்குச் சேவையாற்றுவார் என்று எதிர்பார்த்தே யுத்தத்திற்குப் பின்னரும் வன்னி தமிழ் மக்கள் றிஷாத்தை மீண்டும் அமைச்சராக்கினர். ஆனால் வன்னி தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை அமைச்சர் தவிடுபொடியாக்கியுள்ளார்.

தென்பகுதிப் பெரும்பான்மையினரால் பல்வேறு காலகட்டங்களில் பெருந்தோட்டப் பகுதிகளிலிருந்து அடித்து விரட்டப்பட்ட மக்கள் வன்னியிலும் தமது கடின உழைப்பால் காடுகளை வெட்டித் துப்புரவு செய்து தமது இருப்பிடத் தேவையையும் வாழ்வாதாரத் தேவையையும் ஓரளவிற்கு நிவர்த்தி செய்து வாழ்ந்து வருகின்றனர். அமைச்சர் றிஷாட் அவர்களின் காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவா அமைச்சர் ஆயரை பௌத்த தீவிரவாத பிக்குவுடன் ஒப்பிடுகின்றார்? என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்

Tamila. you tried to be smart with sinhalese they taout,teaching u a lots of lesson from Mavilaru til mullivaikal so what is your problem with Muslims we r never weak or afraid of anything
ReplyDelete