கிழக்கு மாகாண சபை தேர்தல் - இரகசிய பேரப்பேச்சுக்களும் ஆரம்பம்
SO
கிழக்கு மாகாணசபையை ஜூன் மாதமளவில் கலைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் கிழக்குத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்குத் தேர்தலில் குதிப்பதாலும், மு.கா. அரசுடன் இணைந்து போட்டியிடவிருப்பதாலும் கிழக்குத் தேர்தல்களம் போர்க்களமாகவே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி நேற்றுமுன்தினம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்து சபை ஜூன் மாதம் கலைக்கப்படும் என உறுதியாக அறிவித்த மறுகணமே தத்தமது பிரதேசங்களுக்கு விரைந்த மாகாணசபை உறுப்பினர்கள் நேற்றுமுதல் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மக்கள் சந்திப்புகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கும் இவர்கள், மீண்டும் மாகாணசபைக்குத் தெரிவாவதற்குரிய காய்நகர்த்தல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என அறியமுடிகிறது.
கிழக்கு மாகாணசபையில் அரச தரப்பில் தற்போது அங்கம் வகிக்கும் சிலருக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்ற அறிவுறுத்தல் சம்பந்தப்பட்டோருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருப்பதால் அவ்வாறானவர்கள் மாற்றுக்கட்சிகளுடன் பேரப் பேச்சுகளில் இரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் நம்பகரமான வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தின.
அதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழரா அல்லது முஸ்லிமா என்பது இதுவரை அரசால் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்பதவியில் நாட்டம் கொண்ட சிலர் அரச உயர்மட்டங்களைச் சந்தித்துப் பேசுவதிலும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
முஸ்லிம் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தனது கட்சிக்கே முதலமைச்சர் பதவியைத் தரவேண்டும் என்று ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துக் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் போது முதலமைச்சர் பதவி மீது நாட்டம் கொண்ட அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் உடனிருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க, கிழக்குத் தேர்தலில் பல இளம் புதிய முகங்களைக் களமிறக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. முஸ்லிம் கட்சியொன்று தனது கட்சிச் செயலாளர் நாயகத்தைக் களமிறக்க ஆலோசித்து வரும் அதேநேரம், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தமது பக்கம் இழுத்து தேர்தல் களத்தில் நிறுத்தவும் இரகசியப் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment