Header Ads



அணுகுண்டை சுமந்து செல்லும் ஏவுகணையை பரிசோதித்து பாகிஸ்தான்

அணு குண்டை சுமந்து செல்ல வல்ல ஏவுகணையை, பாகிஸ்தான் நேற்று விண்ணில் ஏவி சோதனை செய்தது. பாகிஸ்தான் கடந்த, 25ம் தேதி நடுத்தர ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்தது.

இதற்கிடையே நேற்று, 290 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று, எதிரியின் இலக்கைத் தாக்க வல்ல "ஹத்ப்-3' என்ற ஏவுகணையை ஏவி சோதனை செய்தது. ராணுவ அதிரடிப் படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவையொட்டி, அணு குண்டை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.இது குறித்து ராணுவ அதிகாரி காலித் ஷமீம் குறிப்பிடுகையில், "எந்த வித அச்சுறுத்தலையும் முறியடிக்கும் வல்லமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது' என்றார்.

No comments

Powered by Blogger.