Header Ads



கனடா செல்லும் கனவுடன் ஆபிரிக்க நாடுகளில் தவிக்கும் இலங்கையர்கள்..!

கானா போன்ற மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் சந்தேகத்துக்கு இடமாக தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கானாவில்; இருந்து கனடாவுக்கு மீன்பிடி படகு ஒன்றின் மூலம் தப்பி செய்ய முற்பட்ட ஆறு இலங்கையர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

இந்த நோக்கத்துடன் மேலும் பல இலங்கையர்கள் கானா உள்ளிட்ட மேற்கு ஆப்கிரிக்க நாடுகளில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மையப்படுத்தி, ஆட்கடத்தல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்து செல்வதாக கூறி, குறிப்பிட்ட சில ஆட்கடத்தல் குழுக்கள் அவர்களை டோகோவில் அநாதரவாக கைவிட்டுச் சென்றுள்ளது. இது தொடர்பில் சிலர் கைது செய்ய்பட்டும் உள்ளனர்.

இந்த நிலையில் டோகோ முகாம்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட இலங்கையர்களை மீண்டும் கனடாவுக்கு அழைத்துச் செல்லும் வகையில், சில உள்நாட்டு மீனவர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உள்நாட்டு புலனாய்வுத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த அகதிகள் குழுவில் இருந்து சிலர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.