அரசாங்கத்தின் அனுசரணையுடனே பள்ளிவாசல் தாக்கப்படுகின்றன - மங்கள சமரவீர
தேசியக் கொடியையும், பௌத்த கொடியையும் தூக்கிப்பிடித்துக் கொண்டு கோஷம் எழுப்பியவர்களாக அநீதி, அட்டுழியங்களில் ஈடுபடுகிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறிப்பாக தம்புள்ள பள்ளிவாசல்கூட அரசின் அனுசரணையுடன்தான் தாக்கப்பட்டு அசிங்கங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அந்த விடயத்தில் அரசு இதுரையும் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட முன்வரவில்லை. தொடர்ந்தும் இழுத்தடிப்பை செய்துவருகிறது.
இப்னு பதூதா புகழ்துபேசிய இந்நாட்டை இந்த அரசு இரத்தக்கரை படிந்த நாடாக்கிவிட்டத, புத்த பெருமான் இன்றிருந்தால் இலங்கையில் கால்வைப்பதற்கு நினைத்துக்ககூட பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு எமது நாட்டில் புத்த தர்மத்திற்கு எதிரான அதர்மமே தலை வரித்தாடுகிறது.
பிற மதஸ்த்தலங்கைள அடித்து நொறுக்குவதையோ அல்லது அடுத்த சமூகுத்தினருக்கு அநீதி, அக்கிரமங்கள் செய்வதற்கோ பௌத்த தர்மம் எந்த வித்திலும் அனுமதியளிக்கவில்லை. அப்படியிருக்க தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலில் பௌத்த பிக்குகள் நடந்துகொண்ட செயல் அரசின் அநியாய ஆட்சியின் வெளிப்பாடுதான் என்று கூறவேண்டும் எனவும் மங்கள சமரவீர தனதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருப்பதால் இப்படி சொல்கிறீர்கள்
ReplyDeleteஆளும் கட்சியாகி நாட்டை ஆளும் போது அங்கும் நாலு வெறி பிடித்தவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.அதனால் அரசியலுடன் மத வெறி கலக்காமல் பார்த்துக் கொள்வோம் எனஉறுதியெடுங்கள்.
Meraan