தொழுகைக்கு இடையூறுகள் - சியோனிச சக்திகளை சந்தேகப்படுகிறார் அலவி மௌலானா
நாட்டில் சியோனிச சூழ்ச்சி காரணமாக மற்றுமொரு இனவெறி போராட்டம் தலைதூக்கப் போகிறதோ என்ற அச்சநிலை அண்மைக்கால நிகழ்வுகளை நோக்கும்போது தோன்றுவதாக மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலான விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளதாவது,
நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கு தனது உயிரைக்கூட துச்சமாக மதித்த முஸ்லிம் மக்களின் வழித்தோன்றல்கள் இன்றைய முஸ்லிம்கள். இவர்களின் முக்கிய கடமையாகிய தொழுகைக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை இந்த சியோனிச வாதிகளின் முகவர்கள் நடத்துகின்றனர். அவை எம்மை துயரத்தில் ஆழத்தும் செயலாகவே இருக்கிறது.
இந்நாட்டில் எந்த சமூகத்தை சேந்தவராயினும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்போது அதுபற்றி முறையீடு செய்வதற்காக சட்டரீதியான பல்வேறு தாபனங்கள் உள்ளநிலையில் மக்களi கூட்டி போலியாக ஆர்ப்பாட்டம் செய்து நாட்டில் மக்களிடையே வீணான குழப்பங்களை ஏற்படுத்துவது நாட்டின் இறைமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
இலங்கை அரசியல் யாப்பில் சகல இன மக்களும் மத சுதந்திரம் வகுக்கப்பட்டுள்ள நிலையில் சில குழுக்கள்களால் மேற்கொள்ளப்டும் இந்நடவடிக்கை மக்களிடையே பாரிய விளைவுகளை ஏற்படுத்த வழிகோலும். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன் எனவும் அலவி மௌலானாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகப்பட இவர்கள்தான் கிடைப்பார்கள் இவருக்கு இங்குள்ளவர்களை சந்தேகித்தால் பதவி போய்விடுமே எப்பதான் நல்ல புத்தி வரபோகுதோ
ReplyDelete