Header Ads



தனியார் காணியில் மானிக்க கல் படிமம்

பெலிஹுல்ஓயா, ஹல்பே பகுதியில் மாணிக்கக்கல் படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளை நடத்துவதற்காக அதிகார சபையின் குழுவொன்று குறித்தப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இந்த படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணிக்கக்கல் படிமம் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். SN

1 comment:

  1. முஸ்லீமுடைய காணியாக இருந்து விட்டால் அதுவும் புனித பூமியாகிவிடும் .
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.