Header Ads



பூமியை நோக்கி பெரிய எரிகல் வருகிறதாம் - செயற்கை கோள்களுக்கு ஆபத்து

ஸ்பெயினில் உள்ள லாசக்ரா வானிலை மைய விண்வெளி நிபுணர்கள் ஒரு எரிகல்லை கண்டுபிடித்தனர். அதற்கு ‘டி.ஏ.14’ என பெயரிட்டுள்ளனர். இந்த எரிகல் 1 லட்சத்து 40 ஆயிரம் டன் எடை உள்ளது.

இது அடுத்த ஆண்டு (2013) பிப்ரவரியில் பூமியை நெருங்கும் என்று தெரிவித்துள்ளனர்.  இது பூமியை நெருங்கும் மோதும்போது பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக பூமியை சுற்றி வரும் செயற்கை கோள்களில் மோதி அவை அழியும் வாய்ப்பு உள்ளது. குறைந்தது அவற்றின் தகவல் தொடர்புகள் கூட துண்டிக்கப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘நாசா’ விண்வெளி மையமும் கருத்து தெரிவித்துள்ளது. அதாவது ‘டி.ஏ.14’ எரிகல் பூமியை தாக்கும்போது 0.031 சதவீதம் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 1908-ம் ஆண்டு இதுபோன்று ராட்சத எரிகல் சைபீரியா காட்டில் விழுந்தது. அப்போது பல நூறு சதுர மைல்கள் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

1 comment:

  1. Alhamdulillah!

    May Allah forgive our sins & protect from our ummah!

    ReplyDelete

Powered by Blogger.