இலங்கையை பாராட்டும் சிங்கபூர்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் நாட்டின் வெளிவிவகார மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சன்முகம்,இன்று (2012-05-30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம் பெற்ற இலங்கை – சிங்கப்பூர் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.இந்த மாநாடு கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது. இங்கு அமைச்சர் கே.சன்முகம் பேசுகையில் கூறியதாவது,
இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி வேகம பாராட்டுக்குரியது, ஆசியாவின் முக்கிய பிராந்தியமாக இலங்கையும் மாறிவருவது எமது இரு நாட்டு வர்த்த்க மேம்பாடுகளுக்கு மிகவும் வலு சேர்ப்பனவாக இது அமைந்துள்ள என்று சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர்,வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றும் போது கூறினார்.
இலங்கை சுற்றுலாத் துறையின் பால் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால்,சிங்ஙகப்பூர் தமது முதலீட்டாளர்களை இலங்கைக்கு அனுப்புவதில் விருப்பம் கொண்டுள்ளதை தாம் தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.
2011 ஆம் ஆண்டின் இரு தரப்பு வர்த்தக வேகம் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.3 மாதங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூரக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.அதன் பின்னர் நாம் இன்று இங்கு வந்துள்ளதுடன்,நானும்அமைச்சர றசாத் பதியுதீனும் சாட்சிகளாக நின்று இரு தரப்பு புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளோம்.இந்த உடன்படிக்கை மூலம் இலங்கை வர்த்தகர்கள் பலமான பாதையினை நோக்கி செல்லும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பது எனது எதிர்பாரப்பாகும்.தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழல் இதற்கு உகந்த்தாகவும் காணப்படுகின்றது என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
அமைச்சர றசாத் பதியுதீன் தமது உரையினையும் ஆற்றினார்,சிங்கப்பூர் மற்றும் இலங்கை வர்த்தக சமூகப் பிரதி நிதிகளும் இங்கு உரையாற்றினர்.


Post a Comment