தாய்லாந்து பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் மஹிந்த - ஒப்பந்தங்களும் கைச்சாத்து
இலங்கையில் விவசாயம், கடற்தொழில் மற்றும் கல்வித் துறைகளின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளது. தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அந்த நாட்டுப் பிரதமர் ஜின்லக் சினவத்ராவை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்கு தாய்லாந்து அரசாங்கத்திற்கு இதன்போது ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது அழிவடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறு தாய்லாந்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாய்லாந்து பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.தாய்லாந்து பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த சந்திப்பின் போது அழைப்பு விடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மனித உரிமைகள் பேரவையில் தாய்லாந்து பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இலங்கை ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இரண்டு நாடுகளும் அங்கத்துவம் வகிக்கும் சர்வதேச அமைப்புக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாற்றிக்கொள்வதற்கும் இந்த சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கும் இடையிலான அரசியல் கலந்துரையாடல் தொடர்பிலும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான இருதரப்பு ஒத்திவைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பிலும் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இலங்கை சார்பில் தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவரும், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சரும் இரண்டு நாட்டினதும் அரச தலைவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளனர்.

.jpg)
Post a Comment