கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா, மாத்தறை
மீண்டும் மழை பெய்துவரும் நிலையில் ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் பள்ளத்தாக்குகளை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண் சரிவு அபாயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு பிரிவு அதிகாரி ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ, கொரளை பிரதேசத்திலும் களுத்துறை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய, தெரணியகல மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண் சரிவு அபாயம் நிலவுவதாக நிலையம் குறிப்பிடுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை பெல்மதுல்ல இரத்தினபுரி, கலவான ஆகிய பகுதிகளிலும் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய உள்ளிட்ட சில பகுதிகளிலும் கடும் மழையை அடுத்து மண் சரிவு ஏற்படலாம் என ஆர்.எம்.எஸ். பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment