எங்களை நாங்கள் திருத்த மாட்டோமா..?
எம்.வை.அமீர்
2004 டிசம்பர் மாதத்தின் ஓர் விடியல் நமது நாட்டுக்கு சோகத்தை சொல்ல வந்த தினம், நாடே அல்லோல கல்லோலப்பட்டது எங்கும் அழுகுரல்கள் காணும் இடமெல்லாம் உயிரற்றுப்போன உடலங்கள்.
26ம் திகதி தான் நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்கு புதிய பெயர் சுனாமி அது எங்கோ ஜப்பானில் அடிக்கடி வருமாம் இந்த தினத்தில் எங்களையும் பார்த்துவிட்டு தன்னை அறிமுகப்படுத்திச்சென்றது.
அது சும்மா சென்று விடவில்லை மகிழ்ச்சிகரமான அன்றைய விடியலை கொள்ளை கொண்டது பல்லாயிரக்கணக்கான உயிர்கள், உடமைகள்,உறவுகள்,நின்மதி எல்லாவற்றையும் கொண்டு சென்றது. இன்றும் சுனாமியால் அனாதய்களாக்கப்பட்டோர் எம் முன்னே உலாவருகின்றனர் தகட்டு கூடாரங்களில் மக்கள் இன்னும் இருக்கின்றனர்.
சுனாமி இன்னும் வர வாய்ப்பிருக்கிறதாம் இது ஒரு சாராரின் கருத்து, அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சை நிறுவி அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை அறிவுறுத்தி வருகிறது.
இதற்க்காக ஊழியர் படையை உருவாக்கி, 5000000 ஐம்பது லட்சத்துக்கு மேல் செலவு செய்து எச்சரிக்கை கோபுரங்களையும் அரசாங்கம் நிறுவி உள்ளது. இந்த எச்சரிக்கை கோபுரங்கள் பாதுகக்கப்படவேண்டியவை இவை பொதுக்கூட்டங்களுக்கு ஒலி பெருக்கிகளை கட்டும் இடமாக பாவிக்கப்படக்கூடாது தேவையாற்றோர் இந்த எச்சரிக்கை கோபுரங்கள் உள்ள இடத்துக்கே அனுமதிக்கப்படக்கூடாது.
எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து எச்சரிக்கை கோபுரங்கள் எங்களை அறிவுறுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தால் எச்சரிக்கை கோபுரங்களை ஒலி பெருக்கிகளை கட்டும் இடமாக பாவிக்காமல் இருப்போம். இதற்க்கு அனர்த்த முகாமைத்துவ அமைப்பு,மாநகரசபைகள் பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள் ஒத்துழைக்க வேண்டும்.



Post a Comment