இலங்கையில் 30 இலட்சம் வாகனங்கள் - 1000 பேருக்கு 133 வாகனங்கள்
நாட்டில் பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அடுத்த 10 வருடங்களில் 78 இலட்சம் வரை அதிகரிக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் சில வருடங்களில் இலங்கையில் வாகன நெரிசல் அதிகரிக்கலாம் என மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து விநியோக முகாமைத்துவ கற்கை பிரிவின் பொறுப்பதிகாரி பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்படுத்தப்படுகின்ற 30 இலட்சம் வாகனங்களுக்கு ஏற்ற வகையில் இலங்கையின் வீதி கட்டமைப்பு அமைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் வாகன நெரிசல் எற்படுவதை தடுப்பதற்காக புதிய போக்குவரத்து முறைமைகள் குறித்து பொது மக்கள் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆயிரத்திற்கு 130 வாகனங்கள் வீதம் காணப்படுவதாகவும் இது அடுத்த 10ஆண்டுகளில் இரட்டிப்பாக அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக பேராசிரியர் அமல் குமாரகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே வாகன நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் வீதிகளை அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல குறிப்பிடுகிறார்.

Post a Comment