யாழ்ப்பாண மக்களின் குரலாக ஒலித்தேன் - இமெல்டா சுகுமார்
யாழ்ப்பாண மக்களின் குரல்களே என் மூலம் ஒலித்தன. நான் எதையும் சுயமாக பேசவில்லை. மக்களுக்கு முழுமையான சேவை செய்த திருப்தியுடனேயே இடமாற்றம் பெற்றுச் செல்கின்றேன். யாழ்.மக்களுக்கு சேவை செய்ய இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனைக் கட்டாயம் ஏற்றுக்கொள்வேனென யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை பதவியுயர்வுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்து அவரது இடத்திற்கு மட்டக்களப்பு அரச அதிபர் சந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இப்பதவியுயர்வு தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலகத்தில் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண ஊடவியலாளர்களைச் சந்தித்து கருத்துக் கூறினார். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுமார் இரண்டு வருடங்கள் யாழ்ப்பாண மக்களுக்கு கடினமான சேவையைச் செய்தேன் என்ற திருப்தியுடனேயே நான் இடமாற்றம் பெற்றுச் செல்கின்றேன். எனக்கு இப்போது இடமாற்றம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்ø“ல. ஆயினும் நான் ஒரு அரச அதிகாரி என்ற வகையில் இடமாற்றங்கள் எனக்கு புதியவை அல்ல என்பதோடு அவற்றை நான் எப்போது ஏற்றுக்கொள்கின்றேன்.
நான் நிர்வாக சேவையில் முதுநிலை அதிகாரி என்பதால் எனக்கான பதவியுயர்வை ஜனாதிபதியே வழங்கியுள்ளதாக நான் அறிந்துகொண்டேன். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் மூலம் எனக்கு அமைச்சு ஒன்றினதோ அல்லது ஜனாதிபதி செயலகத்தில் முக்கியமான ஒரு செயலாளர் பதவியே வழங்கப்படுமென உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 வருடங்களாக நான் மக்களுக்கு வட பகுதியில் சேவையாற்றியுள்ளேன். நான் அரச அதிபராக யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்ட போது மக்கள் என்னிடம் எதிர்பார்த்தவற்றை மக்களுக்கு நான் செய்துள்ளேன். குறுகிய காலத்தில் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் மனநிறைவாக யாழ்.மக்களுக்கு அதிக சேவையாற்றியுள்ளேன். மக்களும்என் சேவை மூலம் திருப்தியடைந்துள்ளனர். என்னுடைய சேவைக்கு யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல்வாதிகள் பிரமுகர்கள் பொது மக்களென அனைவரது ஒத்துழைப்பும் ஆலோசனையும் கிடைத்தது. அவர்கள் என்னை வழிப்படுத்தியதை இட்டு நான் பெருமைப்படுகின்றேன்.
யாழ்ப்பாண தேவைகள் மற்றும் விருப்பங்களே மக்களின் குரலாக என் மூலம் ஒலித்தன. நான் எதையும் சுயமாக பேசவில்லை. மக்களுக்கு முழுமையான சேவை செய்த திருப்தியுடனேயே இடமாற்றம் பெற்றுச் செல்கின்றேன். இன்னமும் 7 வருடங்கள் ஓய்வு பெறுவதற்கு உள்ளபோது இப்போது ஜனாதிபதி செயலகத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் இப்புதிய வாய்ப்பு மூலம் எனது மக்களுக்கு மேலும் சேவை செய்ய முடியுமென நம்புகிறேன்.
உள்ளூர் மற்றும் “தினக்குரல்’ போன்ற தேசிய ஊடகங்களும் என்னை அதிகம் வளர்த்துவிட்டன. ஊடகங்கள் என்னை உற்சாகப்படுத்தின என்றே கூற வேண்டும். தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வம் எனக்குள்ளது. எனவே மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் அதை பெரும் பேறாகவே கருதுவதாகவும் தெரிவித்தார்.

better not to come madam.you served for your community only,not for the jaffna people.you were one of the main barriers to the resettlement of the jaffna muslims.good by.
ReplyDelete