இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி..!
இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி முர்ஸிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகின் மிகநீண்ட மனிதச் சங்கிலியை அமைக்கும் முயற்சியில் அவரது ஆதரவாளார்கள் ஈடுபட்டுள்ளனர். இம் மனிதச் சங்கிலி கெய்ரோவிலிருந்து அலெக்ஸாந்திரியாவரை சென்று அங்கிருந்து அஸ்வான் வரை நீண்டு செல்லவிருக்கின்றது.
கலாநிதி முர்ஸியின் பொதுத் தொடர்பாளர் கலாநிதி அப்துல் அதீ அவர்கள் இது தொடர்பாக தெரிவிக்கும் போது இம் மனிதச் சங்கிலியின் மொத்தத் தூரம் 762 கிலோமீட்டர்கள். இது நகரங்கள், கிராமங்கள் என்பனவற்றை ஊடறுத்து கெய்ரோ முதல் அஸ்வான் வரை செல்லும் என்றும் மேலதிகமாக ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவான மிக நீண்ட மனிதச் சங்கிலியாக இதனை கிண்ணஸ் சாதனைப் புத்தகத்திலும் பதிவதற்கான நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். IT


Post a Comment