இலங்கைக்கு இந்திய ஆசிரியர்கள் வேண்டாம் - வேலையற்ற பட்டதாரிகள் கடும் எதிர்ப்பு
இலங்கையில் ஏற்கனவே அதிக எண்ணிக்கையான வேலையற்ற பட்டதாரிகள் காணப்படும் அதேவேளையில், இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ளும் முற்சியில் அரசாங்கம் இறங்கியிருப்பதை, நாட்டின் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்த்துள்ளனர்.
இந்திய அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சுக்களின் போது எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம், இந்தியாவிலிருந்து 3000 ஆசிரியர்கள் இலங்கை பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 7000 வரையான தமிழ் இளைஞர் வேலையற்ற பட்டதாரிகளாகக் காணப்படும் போது இலங்கை அரசாங்கமானது இவ்வாறானதொரு தீர்வை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதில் சிஅரசாங்கமானது நீதியற்ற முறையில் நடப்பதாகவும், இங்கு வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் டம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கமானது முதலில் நாட்டிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்க வேண்டும் எனவும், இதற்கான தீர்வை எட்டவேண்டிய தேவையுள்ளதாகவும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டம்மிக்க முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அமைச்சர்கள் ,புத்தி ஜிவீகள் சாதாரண சிங்கள மக்கள் இந்தியாவுக்குப் போனால் இன வெறி கொண்டு
ReplyDeleteஎதிர்க்கும் தமிழ் நாட்டுக்காரனா ஸ்ரீ லங்கா வரப்போகிறான் ?அல்லது இந்திய முழுவதும் இருந்தா
வரப்போகிறார்கள்? எந்தப் பைத்தியக்காரன் எடுத்த முடிவுநாட்டு தலைகளுக்கு மறை கழன்றுவிட்டது போலும் .
அவனவன் தொழில் இல்லாமல் களவு,விபச்சாரம் ,போதைப் பாவனை,வியாபாரம் என்று சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கிறான் .இவங்க எடுக்கிற முடிவுகளை பொன்னேளுத்துகளால் அலரி மாளிகையில்
பொறித்து வைக்க வேண்டும்.தேரர்களே !இதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் .
Meeraan